200 ஆண்டுகளின் நிறைவானது எவ்வாறுபுதியதொரு விடிவாக அமையும்?
இ லங்கை நாட்டை பொறுத்தவரையில் மலையகத் தமிழர்கள் 200 வருட கால வரலாற்றைக் கொண்டவர்கள் என்பது நாம் அறிந்ததே பிரதான மாவட்டங்களில் செறிந்து வாழ்கின்ற நமக்கு அதே நாலடி காமிராக்கள் அதே குடிசைகளிலும் முறையற்ற சுகாதார வசதி கல்வி வசதி பொருளாதார பிரச்சினை வறுமை வேலைவாய்ப்பு திண்டாட்டம் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிய இளைஞர் யுவதிகளின் பயணம் சிறுவர் துஷ்பிரயோகம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி திட்டமிடப்பட்டு திணிக்கப்படுகின்றது வினியோகம் இளைஞர்களை நகர்ப்புற மோகம் என்ற பல்வேறு துன்ப துயரங்களை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகின்ற ஒரு சமுதாயமாக வாழும் நமக்கு விடியல் என்பது எவ்வாறு எப்போது என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் காலை சூரியன் ஒப்பானவர்கள் இளைஞர்கள் அவர்கள் எழுந்துவிட்டால் வெளிச்சம் இல்லாமல் போய்விடுமோ என்று தாய் நாவலை படித்த போது ஏற்பட்ட தாக்கத்தை இந்தவேளை நினைத்தாலும் அந்த வார்த்தை நமது சமுதாயத்திற்கு என்னவோ வெறும் வார்த்தையாகவே எடுத்துக் காட்ட முடியும் எண்கின்ற போது மன சங்கடமே. அதற்காக நான் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தூற்றவில்லை நம் சமுதாயத்திற்காக ஏதோ ஒரு வழியாக ஆங்காங்...