200 ஆண்டுகளின் நிறைவானது எவ்வாறுபுதியதொரு விடிவாக அமையும்?



லங்கை நாட்டை பொறுத்தவரையில் மலையகத் தமிழர்கள் 200 வருட கால வரலாற்றைக் கொண்டவர்கள் என்பது நாம் அறிந்ததே பிரதான மாவட்டங்களில் செறிந்து வாழ்கின்ற நமக்கு அதே நாலடி காமிராக்கள் அதே குடிசைகளிலும் முறையற்ற சுகாதார வசதி கல்வி வசதி பொருளாதார பிரச்சினை வறுமை வேலைவாய்ப்பு திண்டாட்டம் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிய இளைஞர் யுவதிகளின் பயணம் சிறுவர் துஷ்பிரயோகம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி திட்டமிடப்பட்டு திணிக்கப்படுகின்றது வினியோகம் இளைஞர்களை நகர்ப்புற மோகம் என்ற பல்வேறு துன்ப துயரங்களை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகின்ற ஒரு சமுதாயமாக வாழும் நமக்கு விடியல் என்பது எவ்வாறு எப்போது என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் காலை சூரியன் ஒப்பானவர்கள் இளைஞர்கள் அவர்கள் எழுந்துவிட்டால் வெளிச்சம் இல்லாமல் போய்விடுமோ என்று தாய் நாவலை படித்த போது ஏற்பட்ட தாக்கத்தை இந்தவேளை நினைத்தாலும் அந்த வார்த்தை நமது சமுதாயத்திற்கு என்னவோ வெறும் வார்த்தையாகவே எடுத்துக் காட்ட முடியும் எண்கின்ற போது மன சங்கடமே. அதற்காக நான் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தூற்றவில்லை நம் சமுதாயத்திற்காக ஏதோ ஒரு வழியாக ஆங்காங்கே தனித்தும் ஒருசில கூட்டமாகவும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் சுய சிந்தனையோடு. மனிதன் மரணித்து அடக்கம் செய்வதற்கான இடம் கூட இல்லாத சமூகமாகவே நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஒரு மலையக இளைஞனாக இங்கு காணும் போதே எனக்கு ஆதங்கம் உச்சம் பெறுகின்றது. கையாலாகாத அரசியல்வாதிகளை காலம் காலம் நம்பி நாசமாய் போனது தான் மிச்சம். அடிப்படைத் தேவைகள் அல்லது அடிப்படை மாற்றம் எதுவென்று தெரியாத மூடர்களை தேர்தல்களில் அரியாசனம் ஏற்றுவதற்கு நாம் தவறியதில்லை. ஆனால் அதற்கு பிரதிபலனாக ஏமாற்றம் மட்டுமே. தேர்தல் காலங்களில் நோக்கி வருவதும் பின் விலாசம் கூட தெரியாமல் மறைந்து விடுவதும் இவர்களை நம்பி பாமர மக்கள் என்று சொல்லப்படுகின்ற நம் பெரியோர்கள், முன்னோர்கள் ஏமாந்து போனார்கள் என்பது என்னவோ பரிதாபமே. ஆனால் மட்டைக்கும் பந்துக்கும்பின்னே செல்லும் என்னுடன் வாழும் சமுதாயத்தை பார்க்கும்போது கூட எங்கேயும் என்னால் பதிவிடவும் எடுத்துக் கூறவும் முடியவில்லை. இங்கே யாராவது இறந்தால் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை கன்றுகளை அகற்றி ஆழமான குழியை வெட்டுவதற்கு கூட முகாமையாளரிடம்  உரிய அனுமதியை பெற வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை என எண்ணுகிறேன். இது மட்டுமா ஏதோ எங்கள் சுய முயற்சியில் வீடு கட்டுவதற்கு வீட்டை திருத்துவதற்கு ஏன் மலசல கூடம் அமைக்க வேண்டும் என்றால் கூட யாரோ பெயர் தெரியாத ஒருவரிடம் அனுமதி பெற வேண்டிய நிர்ப்பந்தம் நான் பார்க்காமலே கேட்காமலே இல்லை. சிலவேளை நாங்கள் அனுமதி பெற்றாலும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வாறு சொல்ல முடியாத அவலம் தொடர்கின்றது

தோட்டக்காட்டான், மலையகத்தான், தோட்டத் தொழிலாளர்கள் என்று பச்சை குத்தப்பட்ட சமூகம் இன்று நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்து தமது குடும்ப வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு செல்கின்றனர். நாட்டின் முதுகெலும்பாக இன்றுவரை நாங்கள் இருந்தாலும் அனுதினமும் எங்களின் முதுகு தேய்ந்து கொண்டே செல்கின்றது என்பதை ஒரு இளைஞனாக கண்ணீருடன் இங்கே பதிவு செய்கின்றேன். மொத்த வெளிநாட்டு அந்நிய செலாவணி வருமானத்தில் நாற்பத்தி மூன்று வித பங்களிப்பு சம்பள பிரச்சனை சுய காணி தேவை மாணவர்களின் கல்வி பின்னடைவு போன்ற பல சிக்கல்கள் இருந்து வருகின்ற நிலையில் மலையக அரசியல் தலைமைகள் வெறும் பாடல்களால் நமக்குள் பல முரண்பாடுகளை உருவாக்கி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும் இதை அறியாத மலையக இளைஞர்கள் சமுதாயம் தொடர்ந்து அரசியல் தலைமைகளுக்கு அடிபணிந்து செல்கின்றனர் நாட்டிலோ பாரத பிரதமரின் வருகை முக்கியமான தலைப்பாக இருந்தாலும் மலையகத்தில் அரசியல் தொழிற்சங்க தலைமைகளுக்கு இடையில் யார் வரவேண்டும் என்பதும் யார் உடன்படிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பல முறுகள் ஏற்படுவது ஒருபுறம். கைத்தட்டி கோஷம் போடும் அப்பாவி மக்கள் தன்னோடு சுற்றியிருப்பவர்களுடன் வெட்டிக்கொள்ளும் சம்பவம் இன்னொருபுறம்.

சொந்த மண்ணில் இதுவரை காலம் சுகங்களை அனுபவிக்காத எம்மவர்கள் ஒரு அரசியல்வாதி கால் பதிப்பதால் தான் அந்த சுகங்களை அனுபவிக்க வேண்டி இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். ஆனால் அந்தத் தேவைகள் அடிப்படையானவைகள் அல்ல என்பதனை மறந்து விட வேண்டாம். இது இவ்வாறு இருக்கும்போது எம் தலைவர்கள் ஏன் தோட்டத் தொழிலாளர்கள…


- ஞானசேகரம் சுதர்சன்

நுவரெலியா

Comments

Popular posts from this blog

ජාත්‍යන්තර මව් භාෂා දිනය

වසර 200ක් සපිරීම නව උදාවක් වන්නේ කෙසේද?

අපි සැවොම යුද්ධයේ පරාජිතයින් ය!