International Day for the Elimination of Violence Against Women
International Day for the Elimination of Violence Against Women
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை நவம்பர் 25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக (International Day for the Elimination of Violence Against Women) நியமித்துள்ளது.உலகெங்கிலும் உள்ள பெண்கள் கற்பழிப்பு, வீட்டு வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு பலியாகிறார்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம். டிசம்பர் 10 ம் தேதி மனித உரிமைகள் தினத்திற்கு முன்னதாக "செயல்படும் 16 நாட்கள்", பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்துடன் தொடங்குகிறது.இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்டுள்ள 2015 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 90% பெண்கள் பொது போக்குவரத்தில் ஒரு முறையாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.2020 ஆண்டின் முதல் 15 நாட்களில் 142 கற்பழிப்பு வழக்குகள், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் பெண் தொழிலாளர் வளம் 33.6% ஆக உள்ளது .இந்த உலக சுகாதார நெருக்கடி மத்தியில் அவர்களுடைய தலைவிதி துயரடைந்து காணப்படுகிறது .கோவிட் -19 இன் இரண்டாவது அலை பரவியதால், உணவு இல்லாமல், மாத சம்பளம் இல்லாமல் போர்டிங் அறைகளில் சிக்கிய ஆடைத் தொழிலாளர்களின் அனுபவம் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் காணப்பெற்றது .மேலும், பெண்கள் தோட்டத் தொழிலாளர்கள் ரூ .1000 / = தினசரி ஊதியம் கூட பெறாமல் அவர்கள் இன்னும் நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறார்கள்.கூடுதலாக, வெளிநாட்டில் எத்தனை இலங்கையை சேர்ந்த பணிப்பெண்கள் தினசரி வன்முறைக்கு ஆளாகுகிறார்கள் ?
கோவிட் -19 தொற்றுநோயின் போது பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது,இது அனர்த்த சூழ்நிலைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதையே காட்டுகிறது.
இலங்கை பெண்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, சைபர் வெளியிலும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்.இணைய பயன்பாடு விரிவடைந்துள்ள நிலையில், இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான இணைய துன்புறுத்தல் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
மதம், கலாச்சாரம் மற்றும் ஒழுக்கநெறிகளில் பெண்கள் என்பதால் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு இலங்கை பெண்கள் ஆளாகியுள்ளனர்.இதற்கிடையில், பெண்கள் சுகாதார அணையாடைக்கு (sanitary napkin) 15% வரியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.நாட்டின் பொருளாதாரத்தின் பல துறைகளில் பெண்களின் பரவலான பங்களிப்பு இருந்தபோதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
ஜனநாயகத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளுக்கும் எதிராக நாங்கள் குரல்கொடுப்போம்.
Act Now
25/11/2020
Comments
Post a Comment