உலக சமாதான தினம்
உ லக சமாதான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று கொண்டாடப்படுகிறது. நாட்டினுள்ளே மட்டுமன்றி நாடுகளுக்கு இடையேயான சமாதான இலட்சியங்களை வலுப்படுத்த இந்த நாளானது அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 2021 உலக சமாதான தினத்தின் தொனிப்பொருளாக அமைவது "நீதியான மற்றும் நியாயம் மிக்க உலகத்திற்காக சிறந்த ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ளுதல்" என்பதாகும். கொவிட் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் குறைவான சலுகை பெற்றவர்கள் மற்றும் பின்தங்கிய மக்களாவர். 2021 ஏப்ரல் அளவில் உலகம் முழுவதிலும் கொவிட் -19 இற்கான தடுப்பூசியானது 687 மில்லியனுக்கும் அதிகமான வழங்கப்பட்டுள்ளது. எனினும் நூறு நாடுகளுக்கு மேல் முதலாவது தடுப்பூசிகூட போடப்படவில்லை. அதேபோல சுகாதாரத்திற்காக அடிப்படையான வசதிகள் இல்லாத காரணத்தினால் குளறுபடிகளுக்கு உட்பட்ட நபர்கள் விசேட அவதானத்தினையும் பெற்றுள்ளனர். தொற்றுநோய்க்கு உட்பட்டவர்களை அவமானப்படுத்துதல், மாற்ற முனைதல் மற்றும் வெறுப்பிற்கு ஆளாக்குதல் போன்றவை அதிகரித்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. நாம் யார், எங்கிருப்பவர்கள், எமது நம்...