உலக சமாதான தினம்




லக சமாதான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று கொண்டாடப்படுகிறது.  நாட்டினுள்ளே மட்டுமன்றி  நாடுகளுக்கு இடையேயான சமாதான இலட்சியங்களை வலுப்படுத்த இந்த நாளானது அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 2021 உலக சமாதான தினத்தின் தொனிப்பொருளாக அமைவது  "நீதியான மற்றும் நியாயம் மிக்க உலகத்திற்காக சிறந்த ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ளுதல்" என்பதாகும்.

 

கொவிட் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் குறைவான சலுகை பெற்றவர்கள்  மற்றும் பின்தங்கிய மக்களாவர். 


2021 ஏப்ரல் அளவில் உலகம்  முழுவதிலும் கொவிட் -19 இற்கான தடுப்பூசியானது 687 மில்லியனுக்கும் அதிகமான வழங்கப்பட்டுள்ளது. எனினும் நூறு நாடுகளுக்கு மேல் முதலாவது தடுப்பூசிகூட போடப்படவில்லை. அதேபோல சுகாதாரத்திற்காக அடிப்படையான வசதிகள் இல்லாத காரணத்தினால் குளறுபடிகளுக்கு உட்பட்ட நபர்கள் விசேட அவதானத்தினையும் பெற்றுள்ளனர்.  


தொற்றுநோய்க்கு உட்பட்டவர்களை அவமானப்படுத்துதல், மாற்ற முனைதல் மற்றும் வெறுப்பிற்கு ஆளாக்குதல் போன்றவை அதிகரித்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. நாம் யார், எங்கிருப்பவர்கள், எமது நம்பிக்கைகள் எவை? என்பன பற்றி வைரசானது கவனத்தில் கொள்வதில்லை. மனித குலத்திற்கு பொது எதிரியான இதற்கு முகம் கொடுக்கும்போது நாம் ஒருவருக்கொருவர் எதிரியாகமால் இருப்பதனை உறுதிப் படுத்திகொள்ள வேண்டும். இத்தொற்றிலிருந்து  நாம் பூரண ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமாயின் நாம் ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் செயலாற்ற வேண்டும். 


உலகில் எந்தவொரு பாகமும் அடக்குமுறைகளுக்கு உடப்டவில்லை என்று கூற முடியாது. உலகின் சுபாவமானது அடக்குமுறைக்கு உட்பட்டது என சிலர் நினைக்கும்போது இன்னொரு சாராரின் நினைப்பானது எம்மால் சண்டை இடுவதை நிறுத்த முடியுமானால் சமாதானத்தை நிலைநாட்டவும் முடியும்  என்பதாகும். எனினும் எவரும் சமாதானத்திற்கு எதிராக நிற்பது கிடையாது. எவ்வாறிருப்பினும் சமாதானம் என்பது யுத்தம் அல்லது  கிளர்ச்சிகளை ஏற்படாமல் செய்வதல்ல. அது பிரச்சினையை தீர்ப்பதற்காக அதன் ஆரம்பம் முதல் அதனது எல்லைக்கே சென்று பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து அதற்கான ஆலோசனைகள் அடங்கிய முயற்சியாகும். 


மனித குலத்திடம் காணப்படுகின்ற மிக உயர்ந்த உன்னதமான விடயம் சமாதானமே என்பது எவ்வித சந்தேகத்திற்கும் அப்பட்பட்டதாகும். ஆனபோதிலும் மனித நாகரிகம் முழுவதும் யுத்தங்களும் வன்முறைகளும் இருந்தே வந்துள்ளன. 


பன்முக கலாச்சார நாடுகள் அமைதியாக ஆட்சியைக் கொண்டு செல்வது , பன்முக அரசியல் சித்தாந்தத்தின் ஊடாகவேயாகும். இலங்கையானது பல்லின கலாசாரத்தினை கொண்ட நாடாக காணப்படும் அதேவேளை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக இழுபறியாக காணப்படுகன்ற தேசிய இன பிரிவினைவாதம், துரோகங்கள், சமூக பிரச்சினைகளுக்கு முடிவில்லாமல் காணப்பட்டமைக்கு காரணம் இலங்கை பின்பற்றுகின்ற உறுதியற்ற கொள்கைகள் காரணமாகவே ஆகும் என்பது வரலாற்றினை தேடித் பார்க்கும்போது தெளிவாகின்றது. தமிழ் பேசுகின்ற மக்களால் உரிமைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் நசுக்கப்பட்டதோடு அது தொடர்பாக எவ்வித கரிசனையும் கொள்ளப்படாமல் இருந்தமையால் அதற்கு பிரதிபலனாக தமிழர்கள் தமக்கான தனியான தேசத்தை உருவாக்குவதற்கான ஆலோசனையை முன்மொழிந்தனர். அதனால் ஏற்பட்ட யுத்தமானது 27 வருடங்கள் தொடர்ந்தது. 


2009ஆம் ஆண்டு சிவில் யுத்தமானது நிறைவு பெற்ற பின்னர் வடக்கு, கிழக்கில் நிறுவப்பட்ட இராணுவ முகாம்கள் மற்றும் அதி-பாதுகாப்பு வலயங்கள் போன்றவற்றிற்காக கைக்கொள்ளப்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கு பதிலாக அரசினால் இன்னும் பல இரானும்வ முகாம்கள், இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற ஹோட்டல்கள்  அமைக்கப்பட்டன. வடக்கு கிழக்கு மக்களின் மயானங்கள் அழிக்கப்பட்டதோடு அதற்கு மேலாக இராணுவ நினைவு தூபிகள் அமைக்கப்பட்டன. தேசிய கீதத்தினை தமிழில் பாடுவது நிறுத்தப்பட்டது. எல்லாவிடங்களிலும் யுத்தத்தின் பயங்கரத்தை நினைவுபடுத்தக் கூடிய நினைவு தூபிகள் அமைக்கப்பட்டன. யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசு செயற்பட்ட விதத்தை நோக்கும்போது சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்ததா? என்ற கேள்வியை எழுப்புகின்றது.


யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் வடக்கு கிழக்கு மக்கள் யுத்தத்திபோது மற்றும் அதற்கு பின்னர் பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பிலான உண்மை மற்றும் நியாத்திற்காக போராடுகின்றனர். இறந்த தம்மவர்களை நினைவு கூருவதனால் அரசின் கெடுபிடிகளுக்கு உட்படுகின்றனர். பலாத்காரமாக பிடுங்கப்பட்ட நிலங்களை பெற்றுக்கொள்ளும்வரை போராட்டம் செய்கின்றனர். இதன்படி இலங்கையில் யுத்தம் இல்லாதபோதிலும்  உண்மையான சமாதானம் இல்லாத நாட்டிற்கான உதாரணமாக காணப்படுகின்றது  என்று கூறுவதில் பிழையில்லை.


இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் எல்லாவற்றிற்கும் மேலாக இந்நாட்டில் இதுவரை நடைபெற்ற நடைப்பெறுகின்ற அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் என்னவென்று உண்மையாக தேடி அறிந்து அதனை ஏற்க வேண்டும். எனவே அங்கு நிலைமையை ஏற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிப்பதோடு சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஒப்ப்புக்கொள்வதனையும் விட்டுச்செல்ல முடியாது.


இலங்கையின் சமாதானத்திற்கு ஏற்பட்டுள்ள இவ்விதிக்கு காரணம் எமது நாடு பல்லின கலாசாரத்தினைக் கொண்ட நாடு என்பதை ஏற்காமல் அதனை உதாசீனம் செய்தமையாகும். தற்போது யுத்தம் இல்லாவிட்டாலும் சமாதானமும் இல்லை. சில சந்தர்ப்பங்களில் கிளம்புகின்ற பிரச்சினைகள் இதற்கு ஆதாரமாகும். பயணத்தின் திசையை திருப்புவதற்கு மற்றும் அதனூடாக இன-மத மற்றும் கலாசாரத்தின் இணைப்பை சரியாக கையாள்வதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இலங்கைக்கு காணப்பட்டது. முப்பது ஆண்டுகளாக நடந்த யுத்தம், பிணக்குகள் என்பவற்றை போசித்த பெரும்பான்மையான மன நிலையின் காரணமாக சமாதானத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வது இலங்கைக்கு இலகுவானதல்ல.  எனினும் இலங்கையின் பயணமானது வீழ்ச்சியடைந்து மனித நாகரீகத்திற்கு முன்பா அல்லது பின்னரா என்பதனை முடிவு செய்வது சமாதானத்திற்கான கதவினை திறப்பதா? இல்லையா? என்பதிலேயே அடங்கியுள்ளது. 


சமாதானத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் பிரச்சினைக்கு அடிப்படையான காரணத்தை கண்டு தெளிய வேண்டியதோடு பிரச்சினையை தீர்ப்பதற்கான எமது போராட்டத்தை மற்றும் மனசாட்சியை எச்சந்தர்ப்பத்திலும் கைவிடலாகாது. எமது வாழ்க்கையில் எச்சந்தர்ப்பத்திலாவது அநியாயம் இடம்பெறுமாயின் எமது சமுதாயத்தில் காணப்படுகின்ற அமைதியின்மை, மழுங்கடித்தல் மற்றும் பிரச்சினையை தீர்ப்பதற்கான சமூகத்தினூடாக மற்றும் அரசியலினூடாக செயற்படுவதற்கு எமக்கு தைரியம் காணப்பட வேண்டும். பொறுப்பினை நிறைவேற்றுவதற்கும் பொறுப்பு கூறுபவர்களை பொறுப்பு கூற வைப்பதற்கும் குரலை எழுப்புவதற்கான எமக்கு சமுதாய விட்டுக்கொடுப்புக்களை செய்வதற்கான தேவைப்பாடு எழுந்துள்ளது. 


அந்த சமூக தேவைப்பாட்டினை உருவாக்கிக் கொள்ளவும் அதற்காக சமூகமாக உழைக்கவும் நாம்  தயாரா?


sources

Act Now

Comments

Popular posts from this blog

වසර 200ක් සපිරීම නව උදාවක් වන්නේ කෙසේද?

මුල්ලිවායික්කාල් දෙමළ වර්ග සංහාර ස්මරණ දිනය

International Day for the Elimination of Violence Against Women