சர்வதேச மனித உரிமைகள் தினம்
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை டிசம்பர் 10, 1948 அன்று மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (UDHR) ஏற்றுக்கொண்டது, டிசம்பர் 10 ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் என்பது இனம், நிறம், மதம், பாலினம், மொழி, அரசியல் அல்லது பிற கருத்து, தேசிய அல்லது சமூக தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் அறிவிக்கும் ஒரு வரலாற்று ஆவணமாகும். இது 500 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாகும்.
இந்த ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினம் கோவிட்-19 தொற்றுநோயின் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த முறை "சிறப்பான மீட்பும் - மனித உரிமைகளுக்காக எழுந்து நிற்பது". (Recover better - Stand up for Human Rights) என்னும் பொருள் ஆகும். இலங்கையிலும், கோவிட்-19 நெருக்கடிகளாக வறுமை, சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும் பிற வகையான மனித உரிமை மீறல்களாக அதிகரித்து காணப்படுகிறது. நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் நாம் சமத்துவமின்மை தொற்று நோய்க்கான தீர்வொன்றை பெற வேண்டும். விசேடமாக தொற்றுநோயின் பொது குடிமகனுக்கு வாழ்வதற்க்கான நல்லதொரு சுகாதாரத்துக்கான உரிமை ,கல்வி உரிமை மற்றும் சுற்றுச்சூழலுக்கான உரிமை போன்ற பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் ஆகியன இன்னும் அரசியலமைப்புக்குள் இன்னும் இணைக்கப்படவில்லை.
கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமையை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மீறிய சம்பவங்களும் இருந்தனமஹர சிறைச்சாலையில் சுகாதார
உரிமைகள் கோரிய கைதிகள் படுகொலை , ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை, சமூக ஊடக ஆர்வலர்கள் கைது மற்றும் சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை சமீபத்திய சம்பவங்களாகும் .சமூகஊடகங்களில் மற்றும் பிரதான ஊடகங்களில் சில அரச அதிகாரிகளும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இனவெறி மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அதிகமாக காணப்பட்டன .பாதிக்கப்பட்டவர்களின் அந்தரங்கத்தை மீறும் வகையில் ஊடகங்கள் செயல்பட்டன. தொற்றுநோய் போன்ற காலத்தில் மனிதஉரிமைகள் குறிப்பிட்ட அளவில் மட்டுப்படுத்த முடியும் அனால் அவை சட்டப்பூர்வமாக மற்றும் நியாயமாகவும் அமையவேண்டும். கொலை, காணாமல் போதல், தன்னிச்சையாக கைது செய்யப்படுதல், சித்திரவதை போன்றவற்றை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்த முடியாது.
ஒரு நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.மனித உரிமை மீறல் ஏற்பட்டால், சட்டத்தை அமுல்படுத்துவது , நீதியை நிலைநாட்டுவதற்க்கான உடனடியான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும். கோவிட் -19 க்குப் பிந்தைய உலகம் இருந்த உலகம் அல்ல. இது மனித உரிமைகள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் நெருக்கடியில் இருக்கும் உலகமாக இருக்கும்.உங்கள் உரிமைகள் மீறப்படும் வரை காத்திருக்க வேண்டாம், உலகில் எங்கும் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எழுந்து நிற்கவும் .உங்கள் குரலை எழுப்புங்கள்.
Act Now
10/12/2020
Comments
Post a Comment