சமாதானம் உருவாக வேண்டும் மதிப்பளிப்பதன் மூலம்.
இஸ்லாமியர்களின் புதவுடலை அடக்கம்செய்வது தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினை இனவாத கொள்கையாளர்களால் உருவாக்கப்பட்டதே, தவிர சுகாதார பிரிவினரால் அல்ல. ஒரு பக்கத்தில் இது அவர்களின் மனித உரிமை. இரண்டாவதாக மத உரிமை. மூன்றாவது, நல்லிணக்கத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கும் இந்த யுகத்தில் அந்த நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டுமானால், செய்ய வேண்டியது ஒன்றே .அது இந்நாட்டில் வாழும் அனைத்து மதத்தினரினதும் உரிமையை பாதுகாத்தலே.
அடக்கம் செய்வதால், கோவிட்-19 பரவுவதாக உறுதிபடுத்தப்படவில்லை. அண்மையில் வெளிவந்த “தொழிநுட்ப அமைப்பு அறிக்கையில்” அவர்கள் அடக்கம் செய்வதற்க்கும் எரிப்பதற்க்கும் அனுமதித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏன் ஆளுகை செய்பவர்கள் இதை குறித்து பேச மறுக்கின்றார்கள்?
இதற்க்கு முன் எமது இஸ்லாம் சகோதரர்களுக்கு எதிராக தர்கா நகரிலும் ,அம்பாரையிலும் திகனையிலும், நாசம் செய்தனர் . சொத்தை கொள்ளையடித்தனர், தீ மூட்டினர், இந்த நேரத்தில் இஸ்லாம் மக்களை வேதனைபடுத்தி வன்முறையை அழைக்கிறார்கள். இஸ்லாம் மக்கள் இந்த நேரத்தில் அறிவுள்ள நபர்களாக எங்கள் உரிமையை பாதுகாப்பது அரசியலின் தீர்மானமாக இருக்க வேண்டுமென்று இருக்கிறார்கள். அரசு எதிர்பார்ப்பது மதவாத , இனவாத கலவரத்தையா? அவர்களுக்கு அவர்களின் மதத்தை மதித்து ,மதஉரிமையை பாதுகாக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது.
இந்த நாட்டை ஆளுகை செய்ய வேண்டும் அரசியல் யாப்பிற்க்கு அமைவாகவேயன்றி, மதவாத மற்றும் இனவாத தேவையின் அடிப்படையில் அல்ல. இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் மதத்தினருக்கும் அரசியல் அமைப்பு பொதுவானது.
ஜெனிவா மனித உரிமைகள் அமர்வு நடைபெறும் இவ்வேளையில், அதை இலக்காக கொண்டு அல்ல, இந்நாட்டின் வாழும் மக்கள் சமாதானத்தோடும், நல்லிணக்கத்தோடும், வாழ்வதற்கான உரிமைகள் காக்கப்படும் தீர்மாணம் எடுக்கப்படல் வேண்டும். பிரஜைகளின் உரிமைகளை அரசியல் அமைப்பு எல்லைக்குள் இருந்த வண்ணம், இந்த சிக்கல்களுக்கு தீர்வு எடுப்பார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். சமாதானம் உருவாக வேண்டும் மதிப்பளிப்பதன் மூலம். மதிப்பளித்தல் இடம் பெற வேண்டும் அரசியல் அமைப்பு, நீதி, மனித உரிமைகளுக்கு அமைவாகவே.
சத்திவேல் அருட்தந்தை.
Comments
Post a Comment