ஹட்டன் நகரம் திடீர் என தனிமை படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்


24.10.2020 அன்று ஹட்டன் மீன் வர்த்தக நிலைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டதை தொடர்ந்து பஸ் நிலைய பகுதி பகுpயளவில் முடக்கப்பட்டது. ஆனாலும் மக்களின் வாழ்க்கை நிலை பாதிக்கவில்லை.

உதாரணம்
•மேசன் தொழில்
•சிற்றுண்டி தள்ளு வண்டி வியாபாரிகள்
•கடைத் தொகுதிகளில் தொழில் புரிவோர்
•தினக்கூழிகள்
ஆனாலும் 27.10.2020 காலை 10 மணியளவில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி திடீர் என இராணுவ தளபதியின் ஆலோசனைக்கிணங்க ஹட்டன் நகரம் முடக்கப் பட்டது. இது எமது வாழ்வாதாரத்தினை பெரிதும் பாதிக்கின்றது. முன்னறிவித்தல் இன்றி முடக்கப்பட்டதால் எங்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை கூட கொள்வனவூ செய்ய முடியவில்லை. நாங்கள் தினக்கூழியாக இருப்பதனால் எங்களிடம் சேமிப்பு கூட இல்லை. அத்தோடு ஒரு வீட்டில் ஐந்து பிள்ளைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவயோதிபர்கள் பிறரை தங்கி வாழ்வோர் மற்றும் கணவனை இழந்த பெண்கள் போன்றவர்களாகிய நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியவில்லை.
ஜனநாயக நாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் எமது மலையக சமூகத்தை முன்னறிவித்தலின்றி முடக்குவதால் எமது வாழ்வாதார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. கடந்த முறை அரசாங்கத்;தால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண 5000ஃஸ்ரீ பணம் சமூகத்தில் பலருக்கு கிடைக்காமையினால் பலர் கடுமையான இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது இருக்கும் சூழல் நிலைமைகளுக்கு எங்கள் சமூகத்திற்கு உதவிகள் கிடைக்கும் என்று கடுகளவூம் நம்பிக்கையில்லை. ஆனால் எங்கள் நிலைமையிலிருந்து நோக்கினால் மாத்திரமே எங்களின் கஷ்டம் புரியூம்.
முன்னறிவித்தலின்றி ஹட்டன் நகரம் திடீரென்று முடக்கப்பட்டதால் மக்கள் மிகவூம் பாரிய அசௌகரியங்களுக்கு தள்ளப்பட்டனர். மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் தோட்ட முகாமையாளர்கள் மக்களுக்கு உதவி புரிந்தனர். ஆனால் எமது யூலிப்பில்ட் தோட்டம் ஹட்டன் பகுதியில் கடந்த இரு மாதங்களாக தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மக்களின் தொழில் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களிடம் காணப்பட்ட பணப்புழக்கம் தடைப்பட்டது. இது மட்டுமின்றி திடீர் என முன்னறிவித்தலின்றி ஹட்டன் நகரத்தை முடக்கியதால் தினக்கூழி செய்பவர்களுக்கும் பணத்தட்டுப்பாடுஇ பொருளாதாரம் மந்த கதியில் பயணிக்கின்றமையால் அசௌகரியத்தை எதிர் நோக்குகின்றௌம்.
மனம் திறந்த மக்களின் கருத்து… தற்போதைய சூழல் நிலைமையின் கீழ் மக்களிடம் இன்று சமைத்து சாப்பிடுவதற்கு கூட பொருட்கள் இல்லை என்பதே உண்மை.
தனியார் வர்த்தக நிலையங்களில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பொருள் விலையில் அல்லாது அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர். அதனால் மக்கள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்நோக்குகின்றனர்.
தகவல்
எ.சாந்தகுமார்

Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்