மஹர சிறைச்சாலை சிறைக்கைதிகளின் கொலை

வம்பர் 29 அன்று மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை ஒன்பது சிறைக்கைதிகள் இறந்துள்ளதுடன் இன்னும் ஏராளமானோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஹர சிறைச்சாலையினுள் கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் தங்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறைக்கைதிகள் கோரியதோடு ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சிறைப்படுத்தப்பட்டு இருக்கின்ற சிறைக்கைதிகள் தொடர்பாக பல்வேறான சர்வதேச பொருத்தனைகளின் ஊடாக இலங்கை அரசு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளது. 1980 தொடக்கம் இலங்கை அரசு என்ற ரீதியில் உடன்பட்டுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) ஊடாக வாழும் உரிமை மற்றும் சுதந்திரம், நீதிமைய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மற்றும் நியாயமான வழக்கு விசாரணை தொடர்பாக காணப்படும் உரிமையை உறுதி செய்துள்ளது. அதன் 10 (1)ஆம் உறுப்புரை வெளிப்படுத்துவதாவது “சுயசுதந்திரம் இழந்த அனைத்து மனிதர்களுக்கும் மனிதாபிமானம் மற்றும் மனிதனின் பிறப்புடன் கிடைக்கப்பெற்ற மனித உரிமைகள் உறுதி செய்யப்படுமாறு நடத்தப்பட வேண்டும்" எனக் கூறுகின்றது.
மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச வெளிப்பாட்டின் ஊடாக வாழ்வதற்கு, சுதந்திரத்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு உள்ள உரிமை தொடர்பாக கூறியுள்ளதோடு மனித வாழ்க்கையின் பெறுமதி உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளை நடத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கொள்கைகளில் முதலாவது கொள்கை குறிப்பிடுவதாவது அனைத்து சிறைக்கைதிகளும் மனிதாபிமான முறையினூடாக அவர்களுக்குரிய பெறுமதி மற்றும் கௌரவம் காரணமாக கௌரவமாக நடாத்தப்படுவது அவசியமாகும் என்பதாகும்.
இலங்கையின் அரசியலமைப்பில் 11வது உறுப்புரையினூடாக கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படாமல் இருப்பதற்கான உரிமையானது அடிப்படை உரிமை என வெளிப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல வாழ்வதற்கான உரிமையானது மறைமுகமாக வழக்கு தீர்ப்புக்களின் ஊடாக நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதேபோல கொவிட் பரவலின் ஆபத்து காரணமாக இந்த வருடத்தில் மார்ச் மாதத்தில் அனுராதபுர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக சிறைக்கைதிகள் இருவர் கொலை செய்யப்பட்டனர். அதன் பிறகு அச்சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதே வரிசையில் இந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் “சிறைச்சாலையினுள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெறுகின்ற நீதிக்கு எதிரான மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை ஆராய்வது மற்றும் தடுப்பது" தொடர்பாக தேவையான அதிகாரங்களுடன் ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டது மற்றும் புதிய ஜனாதிபதி கடந்த பெப்ரவரி மாதம் வெளிக்கட சிறைச்சாலையினை பார்வையிட்டபோது அங்கு காணப்படுகின்ற பிணக்குகள் தொடர்பாக சிறைக்கைதிகளுடன் பேச்சுவர்த்தை செய்து அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதியின் அதிகாரபூர்வ பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் மூன்று மற்றும் நான்காம் உறுப்புரைகளின் அடிப்படையில் குடியரசின் இறைமையானது மக்களினுடையதாகும். மக்களினால் இவ்விறைமை ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் தேர்தல் உரிமைகள் ஊடாக செயற்படுத்தப்படும். இம்மக்களினுள் சிறைக்கைதிகளும் அடங்குவர். அதனால் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களுக்குரிய ஏற்புக்களை புறந்தள்ளிவிட முடியாது.
ஒரு நாட்டில் சிற்றைக்கைதிகள் இருப்பது அந்நாட்டு அரசின் பொறுப்பிலாகும். அவர்கள் தொடர்பான பொறுப்பும் அரசினுடையதாகும். வரலாற்றில் இலங்கையில் சிறைக்கைதிகள் மிகக் குரூரமான சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் உட்பட்ட சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. எனினும் அவ்வெந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் நியாயம் கிடைக்கப்பெறவில்லை. ஜனநாயகத்தை வரவேற்கின்ற குடிமக்கள் என்ற ரீதியில் நாங்கள் சிறைக்கைதிகளின் அடிப்படை உரிமைகளுக்காக முன்னோக்கி இருப்பதோடு அவர்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டுமென்பதை உறுதியாக வலியுறுத்துகின்றோம்.
“சிறைக்கைதிகள் மனிதர்களாவதோடு அவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே!!"
Act Now

03/12/2020 

Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்