International Day to End Impunity for Crimes Against Journalists

ன்று (நவம்பர் 2) ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கிடைக்கப்படும் தண்டனையிலிருந்து விதி விலக்களித்தலை முடிவு பெறுதற்கான சர்வதேச தினமாகும். (International Day to End Impunity for Crimes Against Journalists ). உலகலாவிய ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்களுக்கான நீதியை நிலை நாட்டும் போக்கானது குறைந்து வருவதனைக் கவனத்திற் கொண்டே இந்த நாள் பெயரிடப்பட்டுள்ளது.

2006 லிருந்து 2019 வரையிலான காலப் பகுதியினுள் உலகலாவிய ரீதியில் சுமார் 1200 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவ் அனைத்து கொலைகள் 10ல் 09க்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. கொலை
செய்யப்படுவதற்கு அப்பால் மிரட்டல், சித்திரவதைகளுக்கு உள்ளாகுதல் வழிந்து காணாமலாக்கப்படல், சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் , பாலியல் வன்கொடுமைகள், கடத்தப்படல் போன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் பல வருட காலங்களாக உலகளாவிய ரீதியில் நடந்து வருகின்றன. ஆனால் உலக மட்டத்தில் கடந்த 10 தசாப்தங்களாக நீதி நிலை நாட்ட பட்டது 10ல் 01க்கு மட்டுமே.
உலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறிக்கப் பட்ட வரைபடத்தில் பாரிய கரும்புள்ளியாக காணப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டளவில் உலக தரப்படுத்தலின் படி உலகில் ஊடகவியலாளர்களுக்கு பாதகம் விளைவிக்கும் நாடுகளில் இலங்கை 6வது இடத்தில் இருந்தது.
“எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு ” (Reporters without Borders) என 2019ன் ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டிக்கமைய உலக நாடுகள் 180 ன் மத்தியில் இலங்கை 127 வது இடத்தில் காணப்படுகிறது.
லசந்த விக்ரமதுங்க, சிவராம் , பிரகீத் எக்னெலிகொட அரியதுரை நடேசன்,
நிமலராஜன், சுகிர்தராஜன், கீத் நொயார், போத்தல ஜயந்த உள்ளிட்ட குற்றங்களுக்கு முகம் கொடுத்த இலங்கை ஊடகவியலாளர்களின் பட்டியல் ஒன்றை சுட்டிக்காட்டலாம். இக்குற்றங்கள் ஒன்றிற்கும் இலங்கையின் எந்த ஒரு அரசாங்கமும் முழுமையான நீதியை பெற்றுக் கொடுக்கவில்லை.
குற்றங்களுக்கு நீதியை வழங்காது குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து
விடுதலை அளிப்பதன் மூலம் மேலும் குற்றங்கள் அதிகரித்து நீதியின்
ஆட்சியானது சரிந்து விழுமே தவிர வேறொன்றும் நிகழாது. மேலும் நாட்டின் நீதிக்கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையும் இல்லாமல் போகும் .
ஊடக சுதந்திரமானது ஒரு ஜனநாயக நாட்டின் பிரதான பண்பாகும் ஜனநாயகத்தை மதிக்கும் பிரஜைகள் எனும் வகையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் எதிரான சட்டம் அமுலாக்கப்பட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஊடகவியலாளர்களுக்கெதிரான குற்றங்களுக்காக கிடைக்கப்படும் தண்டனையிலிருந்து விதி விலக்களித்தலை முடிவு பெறுவதற்கான சர்வதேச தினமான இன்று கொலை காணாமலாக்கப்படல் என்பதை தொடர்ந்து கடத்தப்படல், மிரட்டலுக்கு ஆளாகுதல் வரையிலான குற்றங்களுக்கு முகம் கொடுத்து உயிரிழந்தோர் மற்றும் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக தாய் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோர் என உலகில் இருக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எமது அன்பான கௌரவிப்பை வழங்குவோம்.
Act Now
02/11/2020

Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்