இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச நாள்

மார்ச் 21 இன பாகுபாட்டை அகற்றுவதற்கான சர்வதேச தினமாகும்.  மார்ச் 21, 1960 அன்று தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான அமைதியான போராட்டத்தின் போது 69 பேர் கொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு  அந்நாளை  இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச நாளாக   ஐக்கிய நாடுகள் சபை 1966 முதல்  கடைப்பிடித்தது.  1982 ஆம் ஆண்டில் மாநாட்டின் ஒரு பிரதிநிதியாக இலங்கை  கையெழுத்திட்டது.  இந்த மாநாடு இப்போது உலகின் ஒவ்வொரு நாட்டினாலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், உலகெங்கிலும் உள்ள தனிநபர்களும் சமூகக் குழுக்களும் இனவெறியால் ஏற்படும்  அநீதிகளை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். .

பல நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் இன பாகுபாடு இன்னும் ஆழமாக பதிந்துள்ளது, இது பல்வேறு மோதல்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் வழிவகுக்கிறது.  இன பாகுபாட்டை அகற்ற அரசாங்கங்கள் இனவெறிக்கு எதிரான பரந்த மற்றும் தெளிவான கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து சிறுபான்மை இனக்குழுக்களுக்கு எதிரான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான பாகுபாடு, வன்முறை உட்பட, பல்வேறான இடர்பாடுகள் நடந்து வருகிறது.  காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே, இலங்கை அரசாங்கம் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது, மலையகத் தமிழ் சமூகத்தின் குடியுரிமையை ரத்து செய்தது.  1956 ஆம் ஆண்டின் சிங்கள  மொழி  சட்டத்தின் மூலம், சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக மாற்றப்பட்டது.  வடக்கு மற்றும் கிழக்கில் கூட, சிங்களத்தில் மட்டுமே நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டாயமாக்கப்படும் சட்டங்கள் இயற்றப்பட்டன.  1972 அரசியலமைப்பில், சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றப்பட்டது, பௌத்த மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  தமிழ் மொழி மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்புக்களை குறைக்கும் விதமாக கொள்கைகள் வகுக்கப்பட்டன.  1978 அரசியலமைப்பு சிங்கள மொழி மற்றும்  பௌத்த மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தது.  1983 கருப்பு ஜூலையானது தமிழர்களைக் கொன்றது மட்டுமன்றி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தது.  அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அனுசரணையில் நடந்த இவை நீளமாக பட்டியலிடக்கூடியவை .  இன பாகுபாடுகளுக்கு எதிரான தொடர்ச்சியான அமைதியான போராட்டங்களுக்குப் பிறகு, சில தமிழ் இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சிக்கு திரும்பினர், இது கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரைத் தூண்டியது.  இருப்பினும், யுத்தம் முடிவடைந்ததிலிருந்து அதன் வேர்கள் பற்றிய கவனம் எடுக்கப்படவில்லை.

உள்நாட்டுப் போரை விசாரிக்க 2010 இல் நியமிக்கப்பட்ட கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை "இலங்கையில் இன மோதலுக்கு மூல காரணம் தமிழ் மக்களின் உண்மையான குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கங்கள் தவறியதுதான்" என்று கூறுகிறது.

போருக்குப் பிறகு, பொதுபலசேனா போன்ற தீவிரவாத குழுக்களால் முஸ்லிம்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள்.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு, முஸ்லீம் பெண்கள் தங்கள் ஆடைகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.  கோவிட் தொற்றுநோயின் விளைவாக இறக்கும் சிறுபான்மையினரின் இன அடையாளங்களை ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  .  ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவை அழிக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.  தனித்தனியாகவும் கூட்டாகவும் இந்த நடவடிக்கைகளின் விளைவாக சிறுபான்மையினர் அனுபவித்த கடுமையான சந்தேகத்தையும் வெறுப்பையும் எவ்வாறு குணப்படுத்துவது என்பது ஒரு நாடு என்ற வகையில் எம்மிடம் இன்னும் திட்டம் இல்லை.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மாநாடு, சிடோவின் மாநாடு மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாடு ஆகியவற்றின் இலங்கையும் ஒரு பிரதிநிதியாகும்..  இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 12 (2) வது பிரிவின்படி, எந்தவொரு குடிமகனும் இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படக்கூடாது.  இதனால், பாகுபாடு காட்டப்படாமல் இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு.

எவ்வாறாயினும், அனைத்து சட்டரீதியான மறைப்புகளையும் மீறி, இதுவரை நடந்த எந்தவொரு இன பாகுபாட்டிற்கும் இலங்கையால் நியாயம் தர முடியவில்லை.  வெவ்வேறு இன அடையாளங்களை மதிக்க கொள்கைகளை வகுப்பதற்கு பதிலாக, அரசாங்கங்கள் வெவ்வேறு இன அடையாளங்களுக்கிடையில் வெறுப்பையும் சந்தேகத்தையும் தூண்டிவிட்டு சமூகத்தை முடிவில்லாத வன்முறையில் ஆழ்த்தியுள்ளன என்பது வரலாற்றைப் படிப்பதில் இருந்து தெளிவாகிறது.  இலங்கையில் உள்ள அரசாங்கங்கள் நாகரிக உலகில் அவர்கள் வெறுப்பதை வெறுக்கவும் பராமரிக்கவும் இனவெறியைப் பயன்படுத்துகின்றன.

வெவ்வேறு இன அடையாளங்களின் இருப்பு ஒரு உண்மை.  அந்த பன்முகத்தன்மையை ஒப்புக் கொள்ளாமல், மதிக்காமல், வன்முறையிலிருந்து விடுபட்ட அமைதியான சமூகம் உருவாகாது.  2021 இல் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தின் கருப்பொருள் "இனவெறிக்கு எதிரான இளைஞர்கள் எழுச்சி".  நீங்களோ, உங்கள் நண்பரோ, அல்லது தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத எவரேனும் அவரது / அவளது இன அடையாளத்தின் காரணமாக பாகுபாடு காட்டப்பட்டால், அதற்காக எழுந்து நிற்க தயங்க வேண்டாம். அன்பு, மனிதநேயம் மற்றும் சம உரிமைகளுக்காக எழுந்து நிற்கவும்!


Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்