உலக பெண்கள் தினம்

ன்று (மார்ச் 8) உலக பெண்கள் தினம் .இவ்வருடம் சர்வதேச பெண்கள் தின தலைப்பு  “தலைமைத்துவத்திற்குள் பெண்கள்:கொவிட் -19 உலகத்தில் சமத்துவத்துடனான எதிர்காலத்தை பெற்றுக்கொள்வது”. (Women in leadership: Achieving an equal future in a COVID-19 world”) ஆகும் . கொவிட் -19 கொள்ளை நோயினால் சமத்துவத்திற்க்காக உலகமெங்கும் கலகத்தை ஏற்படுத்தும் பெண்ணை கெளரவிப்பது இவ்வருட தினத்தின் நோக்கம்.

பெண்களுக்கான  விசேட தினமொன்றை கொண்டாட வேண்டுமென்ற கருத்தை  முன்வைத்ததே 1910 சர்வதேச சோசலிச பெண்கள் அமைப்பிலேயேவாகும். 1917ல் சோவியற்ரஸ்யாவில் பெண்கள் வாக்குரிமையை பெற்றுக்கொண்டதன் பின் மார்ச் 8ம் திகதி  அந்நாட்டின் தேசிய விடுமுறை தினமாக நியமித்தது. ஆரம்ப நாட்களில் உலகில் பெண்கள் தினத்தை பிரதானமாக கொண்டாடப்பட்டது சோசலிச இயக்கங்கள் மற்றும் கொமினிஸ்த நாடுகளினால். 1967 ஆண்டாகும்போது  பெண்ணினவாத இயக்கத்தினால் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1977ல் இருந்து ஜக்கிய நாடுகள் அமைப்பினுாடாக வருடாந்தம் இவ்விசேட தினம் கொண்டாடப்பட்டது.

பெண்கள் ஒன்றியம் மற்றும் தலைமைத்துவ உலகில் அனைத்து விடயத்தையும் வெற்றியடைவதற்காக தாக்கத்தை செலுத்தியிருந்தாலும்,  இன்னும் தீர்மானம் எடுக்கும் முறைமையில் பெண்கள் பிரதிநிதிதுவப்படுவது குறைந்தளவில் உள்ளது .22 உலக நாடுகளில் அரச தலைமைதுவத்தை வகிப்பது பெண்களே. ஆனாலும் ஒட்டுமொத்தமாக உலகில் பாராளுமன்ற இலக்கியவாதிகளின் மத்தியில் பெண் பிரதிநிதிதுவம் 24.9% மாகும். எதிர்காலத்தில் முன்னேற்றவீதத்தின் அடிப்படையில் அரச தலைமைத்துவம் வகிப்பதில் ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்க இன்னும் 130 வருடங்களாகும்.

சுகாதார சேவையாளர்கள் , விஞ்ஞானிகள், வைத்தியர்கள் ஆக கொவிட் -19க்கு எதிராக  போராடுகிறவர்களிடையே பெண்களும் இருக்கிறார்கள். ஆனாலும் பொதுவாக உலகலாவிய ரீதியில் அவர்கள் சம்பளம் பெறும் அந்தந்த துரைகளில் ஆண்களைவிட 11 %குறைவாகவே. 87உலக  நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் கொவிட் -19 காலத்தில் அத்துறைகளில் ஆண் பெண் சமத்துவம் 3.5 % இறங்கியுள்ளதாக வெளியாகியுள்ளது. உலகம்முழுவதும் சமூகநீதி, பருவநிலை மாற்றம், சமத்துவத்திற்க்காக சமூக இயக்கங்களில் தலைமைத்துவத்தை எடுத்து நடத்துவது விசேடமாக யுவதி ஒருவரே. ஆனாலும் உலகமுழுவதும் பாராளுமன்றத்தில் 30 வயதுக்கு குறைவாக பெண்கள் பிரதிநிதிதுவம்  இருப்பது1 % மட்டுமே .

இலங்கையில் வாக்காளர்களில் 56 பெண்களாயிருந்தாலும் பாராளுமன்ற பெண்கள் பிரதிநிதிதுவம் 5% குறைந்தளவேயாகும். இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் முகங்கொடுக்கும் சிக்கல்களில் குடும்ப வன்முறை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவயது திருமணம் எதிர்பாரா கர்ப்பம்  ,தொழிலின்மை ,உயர்ந்தளவில் காணப்படுகின்றது. வெளிநாடு செல்பவர்கள் ஆடை தொழிலாளி ,தோட்ட தொழிலாளி என்றவகையில் இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கியிருப்பது பெண்களே. தொழிலை தவிர வீட்டு வேலைகள், பிள்ளைகளை பாராமரிப்பது உணவு தாயாரிப்பது, போன்ற பெண்களால் செய்யப்படுகின்ற முக்கிய நடவடிக்கைகள் உழைப்பு அதிகரிப்பதாக இலங்கை போன்ற நாடுகள் பொருட்படுத்துவதில்லை. அதனால் சமூகத்தில் அன்றாடம் இழிவுபடுத்தல் தொடங்கி சம்பள பகிர்வு சமமாக இல்லாததுவரை ஆயிரக்கணக்கான அநியாயங்களுக்கு இலங்கை பெண்கள் முகம் கொடுக்கிறார்கள்.

இன்று சர்வதேச பெண்கள் தினத்தை ஆப்கானிஸ்தான், கியுபா, நேபாளம், உகண்டா, வியற்னாம்  போன்ற நாடுகளில் பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, உலகில் குறித்த நாடுகளில் இத்தினத்தை பொருற்படுத்தாமலே உள்ளனர். சில இடங்களில் இது எதிர்ப்பு தெரிவிக்கும் நாளாயுள்ளது. சில நாடுகளில் பெண்ணிமையை கெளரவிக்கும் நாளாயுள்ளது.

உலகில் பெண்களுக்கு வன்முறையின்றிய நிரந்தரமான ,சாமாதானமான, சமஉரிமை  மற்றும் சந்தர்ப்பமுடைய  எதிர்காலத்திற்க்கு உரிமையுண்டு. உலகம்  பிறப்பதும், நிலைத்திருப்பதும் பெண்களினாலேயே பெண்களை ஒரு நாளைக்கு மாத்திரம் விசேடப்படுத்தாமல், நீங்கள் அனுதினம் காணும் பெண்களை மனிதனுக்கு கொடுக்க கூடிய மதிப்பை பெற்றுக்கொடுங்கள்.

Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்