The Right to the Truth Day

ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை அறிவதற்கான சர்வதேச தினம்



டுமையான மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மையை அறியும் உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நாள்                  மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டம் தீவிரமாக மீறப்பட்ட சந்தர்ப்பங்களில்  உண்மையை அறியும் உரிமையின் கோரிக்கைகள் தீவிரமாகியுள்ளன. சட்டவிரோதமாக தூக்கிலிடப்பட்டோர், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர், சித்திரவதைகளுக்கு உட்பட்டோர் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய அவர்களது நெருக்கமானவர்களுக்கு உரிமை உண்டு.சம்பவம் எப்படி நடந்தது, அதில் நடந்த சம்பவங்கள், அதை ஏற்படுத்தியவர் யார், மற்றும் பலவற்றைக் கண்டறியவும் இவ்வுரிமையானது காணப்படுகின்றது.


மார்ச் 24, 1980 இல் படுகொலை செய்யப்பட்ட எல் சால்வடோர் மனித உரிமை மீறல்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.மேலும்ஒவ்வொரு ஆ ண்டும் மார்ச் 24 அன்று, "தீவிர மனித உரிமை மீறல்கள்" தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா சபை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாளின் நோக்கம் கடுமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்வதாகும்.         


இலங்கை நீண்ட காலமாக 1971 மற்றும் 1988-89 இளைஞர் கிளர்ச்சி,  1983 ஜூலை கலவரம், உள்நாட்டுப் போர், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கொலை, காணாமல் போதல் மற்றும் தாக்குதல்,  ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு உள் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு.  ஜேவிபி கிளர்ச்சி மற்றும் உள்நாட்டுப் போரின் போது ஆயிரக்கணக்கானோர்மறைந்தனர்.    இலங்கையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் காணாமல் போனதாக சர்வதேச மதிப்பீடுகள்  கூறுகின்றன. 1980 முதல் 60,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். இருந்தபோதிலும், இலங்கையால் எந்த நேரத்திலும் துல்லியமான விசாரணைகளை மேற்கொள்ளவும் உண்மையை வெளிக்கொணரவும் முடியவில்லை.

 

அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசாங்கமும் உண்மையை வெளிக்கொண்டுவருவதில்  நீண்ட காலமாக தோல்வியுற்றே  வந்துள்ளன. நாட்கள், வாரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கழிந்தும் கூட இவற்றுக்கான தீர்வுகள் பெறப.படவில்லை.  தமது அன்புக்குரியவர்களைப் பற்றிய உண்மையை அறிய காத்திருந்த சிலர் இறந்தனர்.  அவர்கள் உண்மையை அறிய இரவும் பகலும் காத்திருந்தார்கள் உண்மைக்காக குரல் கொடுக்க இலங்கை குடிமக்கள்   ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். உண்மையை அறிந்து நீதியைத் தேடுவதற்காக அரசாங்கம்    உண்மையை அறிவதற்கானஆணையம்,  பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆதாரங்கள் சேகரித்தல், நிறுவன மற்றும் பிற தொழில்நுட்ப முறைமைகளை நிறுவ வேண்டும். 


ஆதாரங்கள்   இவ்வாறான பிரச்சினைகளுக்கு முறையான நீர்வினைக் கையாலாமல் அதனை தொடர்ச்சியாக விடுவதற்கு காராணம் தீமைகளை களைந்தெறிய இன்னும் எமக்கு விருப்பமில்லை என்பதுதானே?


Sources -

https://www.un.org/en/observances/right-to-truth-day

https://www.ohchr.org/EN/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=25740&LangID=E 

https://www.amnesty.org/en/what-we-do/disappearances/ 


Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்