சர்வதேச ஊடக தினம் மற்றும் இலங்கையில் கருத்து சுதந்திரம்
ஏப்ரல் 30 அன்று இந்திய உயர் நீதி மன்றம் கோவிட் 19 தொடர்பான
நடவடிக்கைகளின் நிர்வாகம் குறித்து தாமாக முன்னெடுத்த ஒரு வழக்கை விசாரித்த பொழுது, "குடிமக்கள் தமது
கவலைகளை சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளிப்படுத்தினால் அவை பொய்யான
தகவல்கள் என கூற முடியாது என நாம் தெளிவு படுத்த விரும்புகிறோம். தகவல்கள்
பரிமாறப்படுவதில் எந்த ஒரு அடக்குமுறையையும் நாம் விரும்பவில்லை. இதுபோன்ற குறைகள்
சட்ட நடவடிக்கைகளுக்கு பரிசீலிக்கப்படுகையில் நீதிமன்ற
அவமதிப்பு என்று கருதப்படும்," என நீதிபதி குழாமில் ஒருவரான
தனஞ்சய யஸ்வந்த் சான்றாச்சுட் தெரிவித்தார்.
நெருக்கடியான காலங்களின்போது
பல்வேறு அரசாங்கங்கள் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அடக்குமுறைகளை மேற்கொள்ள
உந்தப்பட்டாலும், அவசரகால மற்றும் நெருக்கடி
நிலைமைகளின்போது கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை மேற்குறிப்பிடப்பட்ட
கூற்று எடுத்துக்காட்டுகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை நாடவும், அரசாங்கமும்
ஏனைய நிறுவனங்களும் இப்பிரச்சினைகள் பற்றி அறிந்து மக்களின் அவசரத் தேவைகளை
பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கவும், மற்றும் கொள்கைகள், சட்டங்கள்
மற்றும் நடவடிக்கைகள் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல்
ஆகியவற்றையும் கருத்து சுதந்திரம்
உறுதி செய்யும் என்பதையும் இக்கூற்று உறுதிப்படுத்துகின்றது.
இக்கூற்றை நான் வாசித்த பொழுது
கடந்த 2020ஆம் ஆண்டு ஊரடங்கின் உச்சக்கட்ட காலத்தில் பொலிஸாரினால் வெளியிடப்பட்ட
பொதுமக்கள் அறிவிப்பு என் ஞாபகத்திற்கு வந்தது. அரச உத்தியோகத்தர்களை
விமர்சித்தும் அவர்களது குறைபாடுகளை குறிப்பிட்டுக் காட்டுவோருக்கெதிராக கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இதனையடுத்து இலங்கை மனித உரிமை
ஆணையகத்தின் தலைவர் தீபிகா உடகம அவ்வாறு அரச உத்தோயோகத்தர்களை அல்லது கொள்கைகளை
விமர்சிப்பதால் மேற்கொள்ளப்படும் கைதுகள் அரசியலமைப்புக்கு முரணானது மட்டுமல்லாமல், அரச
உத்தியோகத்தரின் அல்லது எந்த ஒரு நபரின் செயல்திறனையோ அல்லது கொள்கைகளையே
விமர்சிப்பதற்கான உரிமை ஒரு ஜனநாயக சமூகத்தின் அடிப்படை அம்சம் என தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களின் மூலமாகவே ஆளுகை மேம்பட்டு
ஜனநாயகம் பலப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து சுதந்திரத்துக்கான சட்ட
பாதுகாப்பு
இந்திய உயர் நீதிமன்றத்தின் கூற்றை
வாசித்த அதே தினம், கொழும்பில் ஒரு முக்கிய நபரின்
பயணத்திற்காக முன்னறிவிப்பின்றி பாதைகள் மூடப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டதை
எதிர்த்து பலரை தமது வாகன ஒலி
சமிக்ஞய்களை அழுத்தி எதிர்ப்புத் தெரிவிக்குமாறு தூண்டியதால் ஒருவர் கைது
செய்யப்பட்டிருப்பதையும் ஊடகங்களில் வாசித்தேன். இதற்கு முந்தைய தினம் பாதை
மூடப்பட்டமையால் வாகன ஓட்டுனர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் காணொளி ஒன்றை
சமூக ஊடகத்தில் கண்டேன். அவர்கள் இந்த நபரின் வேண்டுகோளுக்கு சாதகமான முறையில்
ஒத்துழைப்பளித்து ஒலிகளை எழுப்பியதையும் நான் பார்த்தேன். எந்தவித வன்முறையான
செயலோ அல்லது பொலிஸாருக்கோ பொதுமக்களுக்கோ இடையூறு விளைவிக்கும் சம்பவமோ
காணொளியில் இருக்கவில்லை. இந்த நபர் தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்த ஒருவராக
தென்பட்டார். "இதற்காகவா இந்த அரசுக்கு வாக்களித்தோம்?" என அடிக்கடி
இவர் கேள்வியெழுப்பினார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஒலி
எழுப்பி எதிர்ப்பினைத்த தெரிவிப்பது என்பது புதிதான ஒரு விடயமல்ல. கடந்த வார கைது
பற்றி செய்திகள் வெளிவருகையில், சில ஊடகங்கள் தற்போதைய பிரதம
மந்திரியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 2019 ஆண்டு தெரிவித்த
கருத்தினைப் பகிர ஆரம்பித்தன. பாதைகளை மூடி போக்குவரத்தை நிறுத்துவதனால் வாகன ஒலி
எழுப்பி எதிர்ப்பினை தெரிவித்தல் ஒரு இயற்கையான பிரதிபலிப்பு எனவும், இது அரசின் மீது
மக்கள் கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடு எனவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
இச்சம்பவமானது 1993இல் இலங்கையின்
உயர் நீதி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான தீர்ப்பினையும்
ஞாபகப்படுத்தியது. ராஜபக்ஷ உட்பட அன்றைய எதிர்க்கட்சியினர் அன்றைய அரசின்
கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கெதிராக ஜன கோஷ (மக்கள் ஓலி) போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர். ஜன கோஷ போராட்டமானது வாகன ஒலி போன்ற பலதரப்பட்ட ஒலிகளைக் கொண்ட
போராட்டம் என ஏற்றுக்கொண்டது. மேலும், பேச்சு மற்றும் வெளிப்பாடு என்பது
வாய்வழி மற்றும் சொல் என்பனவற்றைத் தாண்டி வேறு வடிவங்களிலும் வெளிப்படுத்தலாம்
எனவும், அரசாங்கம், காட்சிகள், மற்றும்
கொள்கைகள் மீதான விமர்சனங்கள் அரசியலமைப்பின்படி அனுமதிக்கப்பட்டிருக்கும் பேச்சு
சுதந்திரம் தொடர்பான பயன்பாடு எனவும் உயர் நீதி மன்றம் தெரிவித்திருந்தது.
இதேவேளை, ஏற்றுக்கொள்ளப்படாத, அருவருப்பான, வெறுக்கத்தக்க
மற்றும் பிழையான கருத்துக்களை வெளிப்படுத்துவதும், அவை வன்முறையை
அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தூண்டாத வரையில், பேச்சு
சுதந்திரம் எனும் வரையறைக்குள்
ஏற்றுக்கொள்ள முடியும் என தீர்ப்பினை எழுதிய நீதிபதி, ஜனாதிபதி
சட்டத்தரணி ஜஸ்டிஸ் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
கருத்து சுதந்திரத்தின்
முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஏனைய முக்கியமான நீதிமன்ற தீர்ப்புக்களும் உள்ளன.
இவ்வருடம் பெப்ரவரி மாதம், 2008ஆம் ஆண்டில் இலங்கை ரூபவாஹினி
கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பப்பட்ட
நிகழ்ச்சியின் தணிக்கை/முற்கூட்டியே நிறுத்தம் தொடர்பான தீர்ப்பை இலங்கையின் உயர்
நீதிமன்றம் வழங்கியிருந்தது. குறித்த அந்த தீர்ப்பு U.N.S.P. குருகுலசூரிய எதிர் SLRC மற்றும் ஏனையோர் (SC/FR/556/2008)
மற்றும் J.K.W. ஜயசேகர எதிர் SLRC மற்றும் ஏனையோர் (SC/FR/557/2008) ஆகிய
வழக்குகளுக்கானது. தீர்ப்பினை ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக அலுவிகார
எழுதியிருந்தார். மனுதாரர்களில் ஒருவர் குறித்த தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியின்போது
பங்கேற்பாளராக இருந்தார்.
அரசுக்கெதிரான விமர்சனங்கள்
தணிக்கைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்றைய
மனுதாரர், தகவலைப்பெறுவதற்கான தனது உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்த நிகழ்ச்சியின்
பார்வையாளராக இருந்தார். குறித்த மனுதாரர் நிகழ்ச்சியினூடாகவும், நிகழ்ச்சியின்
ஒரு அங்கமாக இருந்தபோதும் இடம்பெறாத பகுதியான, தொலைபேசிமூலம் பங்கேற்பாளர்களிடம்
கேள்விகேட்பத்தினூடாகவும் தகவல்களை
பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளார் என தீர்ப்பில் கூறப்பட்டது. இவ்வழக்கு கருத்து
சுதந்திரம் தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தையும் கையாண்டது.
நடந்துகொண்டிருக்கும் சட்ட
நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பது கருத்துச் சுதந்திரம் தொடர்பான
எதேச்சதிகார மற்றும் கடினமான நடத்தைகளை நியாயப்படுத்துவதற்காக அல்ல, மேலும்
கருத்துச் சுதந்திரத்திற்கான குடிமகனின் உரிமையைத் தடுக்க ஒரு மூடுபொருளாக
பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தது.
சட்டரீதியான பரிந்துரைகள் மற்றும்
இந மத ரீதியான ஒற்றுமையை பேணல், தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள்
ஒழுங்கு, பொதுசுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அறநெறி, மற்றவர்களது உரிமைகளை
உறுதிப்படுத்தல், ஜனநாயக சமூகத்தின் பொதுநலன் கருதிய
நீதியான தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற விடயங்களால் மட்டுமே கருத்து சுதந்திரம்
கட்டுப்படுத்தப்படும் என அரசியலமைப்பு தெரிவிக்கின்றது. எனினும், நடைமுறையில்
ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் நலன்களுக்கு ஏற்றாற்போல் மாற்றுக்கருத்து உட்பட
கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
அண்மைக்காலமாக 2007ம் ஆண்டின் 56ம்
இல்லக்கக் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் (ICCPR) சட்டம்
மற்றும் பயங்கரவாதத் தடைச்ச சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) கருத்து
சுதந்திரத்தைக்கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் கருத்து சுதந்திரம்
தொடர்பான யதார்த்தமும் வாய்ப்புக்களும்
வாகன ஒலி எழுப்புதல் மூலம்
எதிர்ப்பினைத் தெரிவிக்க தூண்டியவரின் கைது என்பது உடகம மற்றும் இலங்கை இந்திய
உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்ட கருத்து
சுதந்திரம் தொடர்பான யதார்த்தத்திலிருந்து தொலைவில் உள்ள கருத்தின் பின்னரான
சுதந்திரத்தின் உண்மை நிலையிற் உணர்த்துகின்றது.
கடந்த இரண்டு தசாப்த காலமாக
இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல்போயும்
இருக்கின்றார்கள். இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின்படி 44
ஊடகவியலாளர்களும் ஊடகப்பணியாளர்களும் இக்காலப்பகுதியில் கொள்ளப்பட்டு அல்லது
காணாமல்போய் இருக்கின்றார்கள். இன்னும் பலர்
கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டும், தாக்கப்பட்டும், பயமுறுத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும்
இருக்கின்றார்கள். பத்திரிக்கை காரியாலயங்கள் மீது, குறிப்பாக யுத்த
பாதிப்புக்குள்ளான வடக்கில் தமிழ் பத்திரிகை மற்றும் கொழுமில் இயங்கும் ஆங்கில வார
இறுதிப்பத்திரிகை ஒன்றின்மீதும் யுத்த காலத்திலும் அதன் பின்னரும் தொடர்ந்து
குறிவைக்கப்பட்டும் வந்துள்ளன. இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்கால அரசாங்கங்கள்
எல்லாவற்றின் கீழும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஜே.ஆர். ஜயவர்தன/ஆர். பிரேமதாச
தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் 1980களின் இறுதிக்காலம் மற்றும் ராஜபக்ஷ
குடும்பத்தாரின் 2006-2014 ஆண்டுகளுக்கிடையான காலப்பகுதியும் ஊடகத்துறைக்கு
இரத்தக்கறை படிந்த காலப்பகுதியாகும்.
நான் அறிந்தவரையில்
இக்குற்றங்களுக்கு ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட
தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு ஒன்று மட்டுமே தற்போது
நடந்துகொண்டிருக்கிறது. எனினும், கோவிட் 19 தொற்றின் காரணமாக
அமுல்படுத்தப்பட்ட முடக்கம் காரணமாக பல விசாரணைகள் ஒத்துவைக்கப்பட்டுள்ள நிலையில்
இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. குற்றப்புலனாய்வுப்பிரிவின்
தலைவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், இவ்விசாரணைகளை
முன்னெடுத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியிலும் இவ்வழக்கினை
முன்னெடுத்தல் தொடர்பான சந்தேகங்கள் எழுந்துள்ளன. எக்நலிகொட
வழக்கின் ஒரு முக்கிய சாட்சி ஒருவரை நீதிபதிகள் குழாம் அரசியல் பழிவாங்கல்
தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்கு முன்னர் சாட்சி கொடுக்க
வேண்டாம் என வலியுறுத்தி அடுத்த நாள் அச்செயலணி அவரது சாட்சியை செவிமடுத்ததை
அடுத்து கவலைகள் எழக்கூடும்.
குறிப்பிட்ட அந்த காட்சி
ஆணைக்குழுவில் தனது முந்தைய சாட்சியத்தை திரும்பப் பெற்றார், இது வழக்கு
விசாரணையை கடுமையாக பாதிக்கலாம். இதுமட்டுமல்லாது, செயலணியின்
அறிக்கை மற்றும் பிரதமர் ராஜபக்சவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் ஆகியவை இவ்வழக்கு மீளப்பெறப்படுவதை நோக்கி செக்குலத்தக்கூடும் எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
தண்டனையிலிருந்து விலக்களிப்பு (impunity) என்பது சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்படும் குற்றங்கள் மற்றும் மீறல்களுக்கான
உரிமமாக செயல்பட்டுள்ளது. இன்று ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள்
மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறவர்கள் மீது சட்டங்கள், கொள்கைகள், கைதுகள், தடுப்புக்காவல்கள், சித்திரவதை, பயமுறுத்தல்கள், அச்சுறுத்தல், துன்புறுத்தல்கள்
ஆகியவை காரணமாக கருத்து சுதந்திரம் பலத்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த
மே மாதம் 3ஆம் திகதி Groundviews தளத்துக்காக
நான் எழுதிய கட்டுரையில் 2021ஆம் ஆண்டில் இவ்வாறு இடம்பெற்ற சம்பவங்களின் 29
உதாரணங்களை நான் குறிப்பிட்டுள்ளேன். இருபத்தொன்பது சம்பவங்கள் மட்டுமே இடம்பெற்றன என எடுத்துக்கொண்டாலும் இவை பரந்த பகுதிகளை உள்ளடக்குவதோடு
மட்டுமல்லாது பலதரப்பட்ட நபர்களையும் பாதித்துள்ளது. சில சம்பவங்கள்
அறிவிக்கப்படாத நிலையிலும், சில குறைவாக அறிவிக்கப்பட்டுள்ள
பின்னணியில், கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தாக
அமையும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வுதாரணங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சட்டத்தரணிகள், ஊடக சுதந்திரம்
தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளும் சுதந்திர ஊடக இயக்கத்தின் அரிக்கிளைகள் மற்றும்
ஏனைய அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்டவை.
ஐந்து முதல் 12 மாத காலத்துக்கு
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல், ஐந்து மாதத்
தடுப்புக்காவலில் பின்னர் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் தொடரும்
ICCPR சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு ஆகியவை இவற்றில் உள்ளடங்கும். இவ்வழக்குகள் நான்கும்
கருத்து சுதந்திரத்தின் மீது ஒரு எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. சுய
தணிக்கை என்பது இன்னொரு சவாலாகும். சக வேலையாட்கள், நண்பர்கள்
மற்றும் குடும்பத்தினரின் அன்பான அறிவுறுத்தலின்படி நானும் இன்னும் சில நபர்களும்
சில நிறுவனங்களும் இதற்கு ஆளாக்கப்படுகிறோம். கடந்த 12 மாதங்களில் குறைந்தது ஒரு
ஊடகவியலாளனும் ஒரு சமூக ஊடக விமர்சகரும் பழிவாங்குதல்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு
வெளியேறி உள்ளார்கள்.
கோவிட் 19 பரவல் தீவிரமடைந்து
வரும் நிலையிலும் சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் இணையம் ஊடாக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வருடாந்த கருப்பு ஜனவரியைப் போலவே சர்வதேச ஊடக
தினமும் கருத்து சுதந்திரம் கடந்த மற்றும் நிகழ் காலத்தில் முகம் கொடுக்கும்
சவால்களை மீட்டிப்பார்க்கும், நடைபெற்றுக்கொண்டிருக்கும்
குற்றங்களை நிறுத்துமாறு கோரும், மற்றும் முன்னைய காலத்தில் கருத்து
சுதந்திரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மீறுதல்களுக்கான பொறுப்புக்கூறலை கோரும்
தினமாக இருக்க வேண்டும். இது சில பாரம்பரிய மற்றும் புதிய ஊடகங்களில், இணையவழி மற்றும்
இணையவழி அல்லாத ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சாதாரண
குடிமக்கள் மத்தியில் இன்னும் காணப்படும் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில்
வெளிப்படுத்தப்படும் கருத்து வேறுபாடு, மற்றும் எதிர்ப்பை ஊக்குவித்து
வளர்க்க வேண்டும். சட்ட ரீதியான பாதுகாப்பும் சர்வதேச பாதுகாப்பும் முக்கியமானவை.
எனினும் இவற்றைவிட தமது உரிமைகளுக்காக போராடும் ஊடகங்கள், கலைஞர்கள், மற்றும் சகல
குடிமக்களே கருத்து சுதந்திரத்தின் பாதுகாப்புக்கும் மேம்படுத்தலுக்கும் மிகவும்
முக்கியமானவர்கள்.
இன்று சட்டபூர்வமான எதிர்ப்பின்
அமைதியான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவது என்பது, வேறு சில
நாட்களில் தவிர்க்கமுடியாத வன்முறை பேரழிவுகரமான வெடிப்பை விளைவிக்கும் என்ற நமது
உயர் நீதிமன்றத்தின் (SC FR
468/92) எச்சரிக்கையை அரசாங்கங்கள் கேட்க
வேண்டும்.
-ருகி பெர்னாண்டோ-
Comments
Post a Comment