1983 கருப்பு ஜூலை

க ருப்பு ஜூலை கலவரம் என்று கூறப்படுவது 1983 ஜூலை 24 முதல் 29 வரை இலங்கை முழுவதும் இடம்பெற்ற தமிழ் எதிர்ப்பு வன்முறை என்று அறியப்படுகிறது. சிங்கள வன்முறையாளர்களினால் தமிழ் மக்களின் வீடுகள், வியாபார ஸ்தலங்களை தீயிட்டுக் கொளுத்துதல், சொத்து அழிப்பு, மற்றும் சொத்துக்களை சூறையாடுதல் மக்களை கொலை செய்தல் போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவ்வன்முறையினால் முதல் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதாக கணக்கெடுப்பு கூறுகின்றது. 150000 தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். ஏராளமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதோடு வடக்கே தப்பியோடிய ஏராளமான இளைஞர்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளுக்கு எதிராக கட்டிஎளுப்பபட்ட இயக்கங்களில் இணைந்தனர். இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களின் மூலமாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக அடுத்தடுத்து வன்முறைகளும் மிலேச்சத்தனமான தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் சாதாரணமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சத்தியாகிரகம் முதல் ஆயுதங்களை கையில் எடுக்காவிடில் பதில் கிடைக்காது என்ற நிலைப்பாடு வர...