1983 கருப்பு ஜூலை



ருப்பு ஜூலை கலவரம் என்று கூறப்படுவது  1983 ஜூலை 24 முதல் 29 வரை இலங்கை முழுவதும் இடம்பெற்ற  தமிழ் எதிர்ப்பு வன்முறை  என்று அறியப்படுகிறது. சிங்கள வன்முறையாளர்களினால் தமிழ் மக்களின் வீடுகள், வியாபார ஸ்தலங்களை தீயிட்டுக் கொளுத்துதல், சொத்து அழிப்பு, மற்றும் சொத்துக்களை சூறையாடுதல் மக்களை கொலை செய்தல் போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.  இவ்வன்முறையினால்  முதல் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதாக கணக்கெடுப்பு கூறுகின்றது.  150000 தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். ஏராளமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதோடு  வடக்கே தப்பியோடிய ஏராளமான இளைஞர்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளுக்கு எதிராக கட்டிஎளுப்பபட்ட இயக்கங்களில் இணைந்தனர்.

இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்களின் மூலமாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக அடுத்தடுத்து வன்முறைகளும் மிலேச்சத்தனமான தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் சாதாரணமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சத்தியாகிரகம் முதல் ஆயுதங்களை கையில் எடுக்காவிடில் பதில் கிடைக்காது என்ற நிலைப்பாடு வரை சென்றமைக்கு காரணமாக அமைந்தது இந்நிமையாகும்.


ஜூலை 23, 1983 அன்று, யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் இயக்கமானது இராணுவத்தினை தாக்கியமையினால் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஆனால்  தமிழ் மக்களுக்கு எதிரான  அரசு புறக்கணிப்பு மற்றும் அரசியல் அடக்குமுறைகள்  1983 ம் ஆண்டுக்கு  முன்னர் இருந்து  நீண்ட காலமாக நடந்து வருகிறது. இராணுவ உறுப்பினர்களுக்கும் ஆயுதக் குழுவிற்கும் இடையிலான மோதலில் சாதாரண பொதுமக்கள் மீது பழிவாங்குவதை நாகரிக சமூகம் ஏற்கவில்லை. ஜூலை 24ம் தேதி, இராணுவத்தின் மூலமாக திருநெல்வேலியில் கடைகள் அழிக்கப்பட்டதோடு, 51 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.  படையினரின் சடலங்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை ஏற்படுத்தப்பட்டது.


காடையர்களினால் தமிழ் மக்களது வீடு மற்றும் வியாபார நிலையங்கள் எரிக்கப்பட்டதோடு சொத்துக்கள் சூறையாடப்பட்டு தமிழ் மக்கள் கொலைசெய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. வெளிக்கடை சிறைச்சாலை உட்பட்ட சிறைச்ஹ்காளைகளில் காணப்பட்ட தமிழ் கைதிகள் பெருந்தொகையானோர் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி ஜெயவர்தன மூலமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு போலிஸ் மற்றும் இராணுவத்தின் அனுசரணையோடு வன்முறையானது மிக நேர்த்தியாக தொடர்ந்தது.

ஜனாதிபதி ஜூலை 28 அன்று ஜனாதிபதி ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆரம்பித்த போராடத்திற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் சிங்கள மக்கள் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர் எனவும் கூறி வன்முறையினை நியாயப்படுத்தினார். 

வன்முறையை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, மற்றும் சமசமாஜக் கட்சி என்பன தடை செய்யப்பட்டன. 

இதற்கு பிறகு அமைந்த அரசாங்கங்களின் மூலமாக 1983 வன்முறை சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு ஜானாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடோ அல்லது கொலைகாரர்கள்  அல்லது குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இலங்கையினுள் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான வன்முறைகளானது 1983 கருப்பு ஜூலை கலவரத்திற்கு பிறகும் முடியவில்லை. சிவில் யுத்தமானது முடிவிற்கு வந்த பின்னரும்கூட முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றதோடு அதற்கு காரணமான எந்தவொரு குற்றவாளியும் சட்டத்திக்லு முன் கொண்டு வருவதற்கு நிகழ்காலத்தில் காணப்பட்ட அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 

இன்று 1983 கருப்பு ஜூலை படுகொலையின் 38வது ஆண்டு நிறைவாகும். எமது கலாச்சாரத்தினால் எமது கல்வியினால் எமது சமயங்களினால் எம்மை வன்முறையற்ற சமுதாயமாக அமைக்க முடியாமைக்கான காரணம் என்னவென்று நாம் இன்று யோசிப்போம். இனிமேல் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் நடைப்பெறக் கூடாது என்று பிரார்த்தனை செய்வதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. நாம் அதற்கான சேவையில் ஈடுபடுவோம். பிறரை மதிப்போம். 


http://news.bbc.co.uk/2/hi/south_asia/3090111.stm 

Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்