சர்வதேச மனிதாபிமான தினம்



ன்று (ஆகஸ்ட் 19) சர்வதேச மனிதநேய தினம்.  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஆகஸ்ட் 19, 2009 அன்று உலக மனிதாபிமான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.  இத்தினமானது ஆகஸ்ட் 19, 2003 ஈராக்கின் செர்ஜியோவில் உள்ள Canal ஹோட்டல் மீது நடாத்தப்பட்ட   தாக்குதலில் கொல்லப்பட்ட ஈராக்கின் பிரதான மனிதாபிமான செயற்பாடடாளரான   Sergio Vieira de Mello  உட்பட 22 பேரின்  நினைவாக பிரகடனபபடுத தப்பட்டது.         

          

சர்வதேச அளவில் கொவிட் பரவலுக்கு எதிரான போராட்டம் பரந்தளவில் இடம்பெறும் இக்காலகட்டத்தில் சர்வதேச மனிதாபிமான தினமானது வருகின்றது. மனிதாபிமான உதவி தேவைப்படும் 54 நாடுகள் காணப்படுவதோடு கொவிட் 19 பரவலின் காரணமாக மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மேலும் 9 நாடுகளின் மக்களுக்காக மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உதவி செய்வதற்காக உதவியாளர்கள் செயற்பாட்டு வீரர்களாக செயற்பட்டு வருகின்றனர்.     ஐக்கிய நாடுகள் சபையின் இணையத்தளத்தில்  சர்வதேச மனிதாபிமான தினத்தையொட்டி.  


"காலநிலை நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில்  நாங்கள் யாரையும் கைவிடவிட முடியாது." என்று   குறிப்பிடப்பட்டுள்ளது.  2021 உலக மனிதாபிமான தினமானது புவிசார் அரசியலினூடாக   உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் குரலை உறுதி செய்யும் வகையில்  #TheHumanRace என்ற ஹேஷ்டேக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.     புவிசார் அரசியலினூடாக அதிகமாக பாதிக்கபடக்கூடிய மக்களுக்காக புவிசார் அரசியல் பற்றி தெளிவான முடிவுகளை எடுக்கும்படி உலகத்தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதனூடாக புவிசார் அரசியலினூடாக ஏற்படுகின்ற இன்னல்களை குறைப்பதே இம்முறை பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.    

    

மனிதாபிமான சேவையாளர்கள் மற்றும் முன்வரிசை சேவையாளர்களுக்கு முகாமைத்துவம் செய்ய முடியாதளவிற்கு  புவிசார் அரசியலினால் மிகப்பெரும் அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. உலகமானது  புவிசார் அரசியலினால் மிகவும் அதிகமான அழிவிற்கு  உள்ளாக்கப்பட்டுள்ளது. இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் தமது வீடு, ஜீவனோபாய வழிகளை இழந்துள்ளனர். 


உலக மனிதாபிமான தினமான ஒகஸ்ட் 19  அன்று சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் மரணித்த மற்றும் காயமடைந்த மனிதாபிமான செயற்பாட்டாளர்களை கொண்டாடும் அதேவேளை தடைகளைப் பொருட்படுத்தாது மக்களுக்காக தொடர்ந்து செயற்படும் அனைத்து உதவியாளர்கள் ,சுகாதார சேவையாளர்களுக்கு எமது கௌரவத்தை செலுத்துவோம்


Comments

Popular posts from this blog

ජාත්‍යන්තර මව් භාෂා දිනය

වසර 200ක් සපිරීම නව උදාවක් වන්නේ කෙසේද?

අපි සැවොම යුද්ධයේ පරාජිතයින් ය!