வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்



இன்று வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாகும். 2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது சபையால் உலகம் முழுவதும் இடம்பெறும் வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் சாட்சிகாரர்களுக்கு, காணாமல் போனவர்களின் உறவுகளிற்கு ஏற்படுகின்ற சித்திரவதைகள், கொடூரமான தண்டனைகள், பயமுறுத்துதல் தொடர்பாக கவனம் செலுத்தி ஆகஸ்ட் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 

வலிந்து காணாமலாக்கப்படுதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பாகும்.  இரண்டாம் உறுப்புரையின்படி அரசின் மூலமாக கைது செய்யப்படுதல், தடுத்து வைத்திருத்தல், கடத்தல் அல்லது வேறு வகையிலான சுதந்திரத்தை பறித்து அவ்வாறு சுதந்திரத்தை பறித்து அல்லது காணாமல் போனவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஏற்றுக்கொள்வதை மறுத்தல் என்பன வலிந்து காணாமல் ஆக்கப்படுவதாக கொள்ளப்படுகின்றது.

சர்வதேச சட்டத்தின்  கீழ் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக அமைவதோடு  அந்த சம்பவங்கள் தொடர்பில் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.


இலங்கையானது  உள்நாட்டுப் போர், ஜேவிபி இளைஞர் எழுச்சிகள் என்பவற்றின் போது லட்சக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடாகும். 1980 தசாப்தத்தின் இடைப்பாதியில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்படுதலின் ஊடாக  60,000-100,000 வரையிலான தொகையினர்  காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையானது உலகில் அதிகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 


சர்வதேச மன்னிப்பு சபை, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற மனித உரிமை அமைப்புகளால் இலங்கை அரச இராணுவம், கடந்த அரசாங்க துணை இராணுவக் குழுக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் மூலமாக நடாத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான விடயங்கள்  ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 


1988-89 காலப்பகுதிகளில் தெற்கில் இளைஞர் கிளர்ச்சியின்போது சிங்கள இளைஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனதோடு பிற்காலத்தில் நாட்டின் சில பிரதேசங்களில் கிடைக்கப்பெற்ற மனித புதைகுழிகள் காணமல் ஆக்கப்படுதலின் உண்மையை பறை சாற்றியது. முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு சிவில் யுத்தத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் அதிகமாக காணப்படுவது தமிழ் இளைஞர்களாவர். 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழ் பேசும் பெருவாரியான தமிழ் இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தம் அல்லது கிளர்ச்சிகள் காணப்படாத காலப்பகுதியில்கூட பதினொரு இளைஞர்களை கடத்தி சென்று காணாமல் ஆக்கியமையானது வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பாக முன்வைக்கக்கூடிய மிக அண்மைய சம்பவமாகும். இவ்வாறு எமது நாடு இழந்தது நாட்டின் பற்று அல்லவா? யுத்த நேரங்களில் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள் காணாமல் போவது தொடர்பில் இலங்கையானது உலகின் கறை படிந்த ஒன்றாக காணப்படுகின்றது.


1985ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தாய்மார்களின் முன்னிலை என்ற பெயரில் பெண்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு தோற்றம் பெற்றது. 1990இல் ஜேவிபி இளைஞர் கலவரத்தின் போது காணாமல் போன 60000 வரையிலான தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மார்களுக்காக நியாயம் கேட்டு 25000 வரையிலான பெண்கள் ஒன்றிணைந்து தாய்மார்களின் முன்னனி  என்ற பெயரில் ஒரு அமைப்பாக ஒன்றிணைந்தனர். பிற்காலத்தில் இவ்வமைப்பின் செயற்பாடானது வலுவிழந்து சென்றதோடு 1990 தசாப்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றிணைவு என்ற பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டதோடு அது இன்று வரை செயற்பாட்டிலுள்ளது. 

காணாமல் போன தமது  அன்புக்குரியவர்களுக்காக தொடர்ச்சியாக  நீதியைக் கோருவதில் எந்த நன்மையும் கிடைக்காத காரணத்தினால் 2017 பிப்ரவரியில் தாய்மார்களினால் கிளிநொச்சியில் சத்தியாகிரகமொன்று ஆரம்பிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் காணப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இப்போராட்டத்தில் இணைந்துக் கொண்டனர். இன்றுவரை, அந்த தாய்மார்கள் அரசாங்கத்தால் பல்வேறு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெயில், மழைக்கு மத்தியில் அமர்ந்து காணப்படுகின்றனர். அத்தோடு 80 வரையானவர்கள் தமது அன்புக்குரியவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை அறியாமலேயே இறந்தும் பொய் விட்டனர்.  இந்த நீதிக்கான போராட்டம் உலகின் தாய்மார்களின் நீண்ட  ஒரு போராட்டமாக கருதப்படுகிறது.


1998 ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட ஆணையம், 2013 உதலாகம ஆணையம், 2011 கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, 2015 பரணகம ஆணைக்குழு போன்றவை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக விசாரித்து அதற்கான நீதியை நிலை நாட்டுவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் அனைத்தும் எந்தவொரு அரசாங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

நிலைமை மோசமாக இருந்தாலும் இன்றுவரை கட்டாயப்படுத்தப்பட்டு  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான  முறையான பொறிமுறையை இலங்கையால் உருவாக்க முடியவில்லை.  2016இல் இலங்கை அரசாங்கமானது காணாமல் போனவர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான சான்றிதலொன்று வழங்குவதற்கு உடன்பட்டதோடு காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகமொன்றும் நிர்மாணிக்கப்பட்டது. 2017இல் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் நிறுவப்பட்ட  பிறகு அரச பாதுகாப்பு இராணுவ அங்கத்தவர்கள் காணாமல் போனமை தொடர்பில் 5000 முறைப்பாடுகளும் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் 23586 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இலங்கையின் புதிய ஜனாதிபதி  உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன அனைவரும் இறந்துவிட்டதாக 2019இல்  அறிவித்தார். 

வலிந்து காணாமல் ஆக்கப்படுதலானது இலங்கை அரசியல் கலாசாரத்தின் பிரதானமான அங்கமாக மாறிவிட்டது. ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து நீதியை நிலைநாட்டும்படி செய்யும் நெருக்கடியாகவோ அல்லது ஆட்சியாளர்களால் இது உடனடியாக நிவர்த்திக்கப்பட வேண்டிய காரணி என்றோ கருதப்படுவதில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பாக எமது சமுதாயம் எவ்வாறான கருத்து நிலையைக் கொண்டிருக்கின்றது  என்றால் அதற்காக போராடும் நபர்களுக்கு வித்தியாசமான நாமங்களை சூட்டும் அளவிற்கு வலுவிழந்து போயுள்ளது. 

இலங்கையானது வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான  மாநாடுகளில் கலந்து கொண்டாலும் எமது நாட்டில் அது தொடர்பான அறிவானது பெரும்பாலான மக்களிடம் இல்லை. தசாப்த காலமாக இடம்பெற்று வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பாக சமுதாயமாக நாம் நீதியை வேண்டியது கிடையாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது வேதனைகளில் நாம் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. சரி செய்யப்படாத வேதனைகள், பாதுகாப்பின்மை, நீதி நிலைநாட்டப்படாமை என்பன எம்மை ஒரு இருண்ட வழியாக அழைத்து செல்கின்றது. 


வலிந்து காணாமல் ஆக்கப்படுதலானது ஒரு சாதாரண நடைமுறையாக கருதி குடிமக்களின் வாழ்க்கை தொடர்பில் எவ்வித பொறுப்பு கூறுவதற்கு எவ்வித அரச தலைவர்களுக்கும் வலிமை கிடையாது. அதனால் அன்று தொடக்கம் இன்று வரை நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை வெளிப்படுத்தி நீதியை நிலைநாட்டுமாறு ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் முன்வைப்பது குடிமக்களாகிய  எமது கைவிடப்படமுடியாத பொறுப்பாகும்.  நாம் அந்த பொறுப்பினை நிறைவேற்றுவோம். காணாமல் ஆக்கப்படுதலை  இல்லாதொழிப்போம்.


Act Now

Sources -

Comments

Popular posts from this blog

වසර 200ක් සපිරීම නව උදාවක් වන්නේ කෙසේද?

මුල්ලිවායික්කාල් දෙමළ වර්ග සංහාර ස්මරණ දිනය

International Day for the Elimination of Violence Against Women