சர்வதேச தாய்மொழி தினம்
பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழி தினம். மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பன்மொழிப் புலமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 21 வங்காளதேசம் (அப்போது கிழக்கு பாகிஸ்தானில்) பெங்கால் மொழியின் அங்கீகாரத்திற்காக மக்கள் போராடினர் அத்திகதியில் அதாவது பிப்ரவரி 21 சர்வதேச சர்வதேச தாய்மொழி தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
1947 இல் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபோது, கிழக்கு பாகிஸ்தான் (தற்போது பங்களாதேஷ் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் மேற்கு பாகிஸ்தான் (இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது) என புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த பகுதிகளில் கலாச்சாரம் மற்றும் மொழி வியத்தகு முறையில் வேறுபட்டு காணப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானை இணைக்கும் பெங்கால் மொழி பேசும் பெரும்பான்மை இருந்தபோதிலும், 1948 இல் அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் உருதுவை பாகிஸ்தானின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தது. கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழி பெங்கால் மொழியாக இருந்ததனால் கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.எனவே பெங்கால் மொழியானது உருது மொழியோடு மேலதிக தேசிய மொழியாக காணப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட போதிலும் பாதுகாப்பு பிரிவினர் மிக மோசமகா இதனை ஒடுக்கினர். பிப்ரவரி 21, 1952 அன்று நடந்த அடக்குமுறையின் போது, சில எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தங்கள் தாய்மொழிக்காக உயிரை தியாகம் செய்த வராலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இலங்கையும் ஒரு பன்மொழி நாடு. காலனிதத்துவ ஆதிக்கத்தின் போது தாய்மொழியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஏகாதிபத்திய எதிர்ப்புடேன் போராட்டத்தை முன்னெடுப்பதில் யாழ்ப்பான இளைஞர் காங்கிரஸின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் காலனித்துவ ஆட்சி முடிவடைந்த போதிலும், ஆங்கில மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக காணப்பட்டது. ஆனால் இலங்கை மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படு வந்த முக்கிய இரு மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் என்பவற்றுக்கு பதிலாக சிங்கள மொழியை மாத்திரம் என்ற சட்டமூலம் பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் 1956 இல்நிறைவேற்றப்பட்டது. தாய்மொழியின் உரிமைக்காக தமிழ் மக்களினால் சத்தியாகிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டபோதும் பொலிசாரினால் இது மிக மோசமாக நசுக்கப்பட்டது. இங்கு ஆரம்பிக்கப்பட்ட இவ்வன்முறையானது நாடு முழுவதும் மிக வேகமாக பரவியது. இதன் காரணமாக தமிழ் பேசும் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
1957 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா-செல்வநாயகம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் ஆட்சிமொழிகளை விட மிகவும் குறைவான கோரிக்கையான நிர்வாக நடவடிக்கைகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. எனினும் இந்த உடன்படிக்கை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கங்கள் உட்பட வெகுஜனங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டமையினால் 1958 ஆம் ஆண்டு அவர்களது முன்னிலையிலேயே இவ்வுடன்படிக்கை கிழித்தெறியபட்டதோடு பண்டாரநாயக்கா அவர்களினால் ஒருதலைப்பட்சமாக உடன்படிக்கையை முறியடிக்கப்பட்டது.இந்த உடன்படிக்கையை மீறப்பட்டதற்கு எதிரான சத்தியாக்கிரகங்களை ஒடுக்கியதுடன், தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டது.
1961 ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்கள மொழி மட்டுமே அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் சிங்களத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டது. மாறாக, யாழ்ப்பாண மக்கள், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பரந்த அளவிலான போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கு சிங்களவர்களும் தீவிரமாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் மொழி உரிமைகளுக்காக குரல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசின் அரசியலமைப்பு சிங்கள மொழிக்கு அரச மொழி என்ற அரசியலமைப்புப் பாதுகாப்பை வழங்குகியது. அச்சந்தர்ப்பத்தில் 1958 தமிழ் மொழிகள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் செல்லுபடிதன்மையானது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. 1978 அரசியலமைப்பின் மூலம் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும், தமிழ் மொழி தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1987 இல் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது தமிழ் மொழியானது இலங்கையின் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எனினும் அரச மொழியாக தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரும் தமிழ் மக்களினால் தமது அரச நிர்வாக விடயங்களை தமிழ் மொழியில் முழுமையாக மேற்கொள்ள முடியாமலேயே காணப்படுகன்றது. விசேடமாக வடக்கு கிழக்கை தவிர்ந்த இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் இந்த மொழி பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். வடக்கு கிழக்கு உட்பட விசேடமாக போலிஸ் சேவையில் இணையும்போது கூட தமது தாய் மொழியில் பணியாற்றுவதற்கு முடியாமலேயே காணப்படுகின்றது.
அரசு நிறுவனங்களிலும், பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் தமிழ் மொழி பேசுபவர்கள் தங்கள் தாய்மொழியில் பணியாற்றுவது இலகுவானதல்ல என்பது இரகசியமல்ல. உறுதியற்ற மொழிக்கொள்கையினால் தமிழ் பேசுகின்ற மக்கள் தமது தாய்மொழியை விடுத்து நடைமுறையில் சாத்திமாகின்ற சிங்கள மொழியை பாவிப்பதற்கும் சிங்கள மொழியினூடாக கல்வியைப் பெறுவதற்கும் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். சுயமாகப் படிக்கும் உரிமையும், அரசுடன் இணைந்து பணிபுரியும் உரிமையும் மனித உரிமையாக இருக்கும் இக்காலகட்டத்தில் இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமை காணப்படுவது வேதனைக்குரியது.
மொழி என்பது ஒரு தனிமனிதன் மற்றும் சமூகத்தின் அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதனால்தான், இலங்கை போன்ற பன்மொழி பேசும் நாட்டில், பிறரின் தாய்மொழிக்காக முன்னிற்பது தவிர்க்க முடியாத ஒரு சமூக பொறுப்பாகும்.
Act Now
21/02/2022
Comments
Post a Comment