International Holocaust Remembrance Day
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27 ஜெர்மனியில் யூதர்களுக்கான சர்வதேச நினைவு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது . இந்த நாள் நாஜி ஜெர்மனியில் உள்ள ஆஷ்விட்ஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதையும் மற்றும் 1933 தொடக்கம் 1945க்கு இடையில் படுகொலை செய்யப்பட்ட 6 மில்லியன் யூதர்கள் மற்றும் நாசிசத்திற்கு பலியாகிய மில்லியன் கணக்கான யூதர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதையும் நினைவுகூருகிறது. இன அல்லது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிரான மத சகிப்புத்தன்மை இன்மை, தூண்டுதல், துன்புறுத்தல் மற்றும் வன்முறை என்பவற்றை கண்டிக்கவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.
இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன்
மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும்.
1948இல், இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் தண்டனைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயம் மாநாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இனப்படுகொலையை சர்வதேச குற்றமாக இம்மாநாடு அங்கீகரித்துள்ளது. 1998ஆம் ஆண்டு, உலகில் முதன்முறையாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், இனப்படுகொலைக்காக ஒரு நபர் தண்டிக்கப்பட்டார். இது ருவாண்டாவின் தாபாவின் முன்னாள் மேயரான ஜீன்-பால் அகயேசுவுக்கு எதிராக இருந்தது.
இனவெறியும் வன்முறையும் தலைவிரித்தாடும் நாட்டிலும் உலகிலும் நாம் வாழ்கிறோம். மற்றொன்று, என்னை விட வித்தியாசமான அடையாளங்களை ஏற்றுக்கொள்ள பழகுவதும், நாம் வாழும் மக்களின் உண்மையான வரலாற்றுக் காலத்தை ஆய்வு செய்வதும், மக்களுக்கு நேர்ந்த மனிதாபிமானமற்ற விதிகளை அடையாளம் கண்டுகொள்வதும், எவ்விதமான எதிர்காலத்தை விரும்புகிறோம் என்பதைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம்.
படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தங்கள் உறவினர்களை நினைவுகூரும் யூத மக்கள், நமது எண்ணங்களேஃநினைவே நமது எதிர்காலத்தின் திசையைத் தேர்ந்தெடுக்கும் திசைகாட்டி என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
Comments
Post a Comment