கறுப்பு ஜூலை 39 ஆண்டுகள் கடந்து நாம் எங்கே இருக்கிறோம்?


றுப்பு ஜூலை என்பது 1983 ஜூலை 24 முதல் 29 வரை இலங்கையில் நடைபெற்ற தமிழர் விரோத வன்முறையைக் குறிக்கிறது. சிங்களக் குண்டர்கள் தமிழ் மக்களின் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் எரித்தும், சொத்துக்களை அழித்தும், கொள்ளையடித்தும், மக்களைக் கொன்றும் வன்முறையைப் பரப்பினர். 400-3000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 150,000 தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். தமிழர்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர், மேலும் வடக்குக்கு தப்பி ஓடிய இளைஞர்கள் பலர் தமிழர்களுக்கு எதிரான அரசின் வன்முறைக்கு எதிராக உருவான ஆயுத இயக்கங்களில் இணைந்தனர்.


இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களால் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அரச வன்முறையும் அலட்சியமும் நீண்ட காலமாக முல்லையில் தொடர்ந்தன. அதுவே தமிழ் மக்களை அமைதியான சத்தியாகாக்களில் இருந்து தமது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு ஆயுதம் ஏந்தாமல் தீர்வு கிடைக்காது என்ற நிலைக்குச் செல்ல வழிவகுத்தது.


ஜூலை 1983 இல் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை விவரிக்க "ஜூலை கலவரங்கள்" என்ற வார்த்தை உண்மையில் ஜூலை 1983 இல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை துல்லியமாக விவரிக்கிறதா என்பது சந்தேகமே. ஒரு கலவரம் ஏற்படுவதற்கு, சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட வேண்டும். எனவே 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு கலவரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அந்த வன்முறையின் தன்மைக்கும் சூழலுக்கும் ஏற்புடையதல்ல. ஜூலை 1983 இல் இடம்பெற்ற வன்முறையானது, இரு தரப்பினருக்கு இடையிலான "கலவரம்" அல்ல. அது இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தேசத்தின் எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் இராணுவம் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி அரச அதிகாரம் மூலம் மேற்கொண்ட திட்டமிட்ட வன்முறைச் செயலாகும்.


1983 இல் தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் ஆரம்பமாக விடுதலைப் புலிகளால் 13 அரசாங்கப் படையினர் கொல்லப்பட்டமையை காரணம் காட்டியமை வரலாற்று கல்வியறிவு மற்றும் அரசியல் பகுத்தறிவின் பற்றாக்குறையை காட்டுகிறது. 1983 கறுப்பு ஜூலை வன்முறையானது 1983 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஒரு ஒற்றைச் சம்பவம் அல்ல.  அதனுடன் தொடர்புடைய இனரீதியான தப்பெண்ணங்களுக்கான  வரலாறு உள்ளது. இலங்கையின் எதிர்காலத்தில் ஆர்வமுள்ள எவரும் அதை புறக்கணிக்க முடியாது.


1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் வடகிழக்கு பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக அரசால் பல வன்முறைகள் நடாத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் கொல்லப்பட்டதோடு  தாக்கப்பட்டனர். மலையகத்தில் இருந்து அகதிகளாக அந்த பகுதிகளுக்கு வந்த தமிழர்களின் குடிசைகளுக்கு சிங்கள அரசு அதிகாரிகள் மற்றும்  இராணுவ வீரர்களின்  முயற்சியால்  தீ வைக்கப்பட்டது. 


ஜூலை 23, 1983 அன்று, எல்.டி.டி.இ.  அமைப்பினர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் படையினர் குழுவொன்று உயிரிழந்தது. இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. எனினும் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீதான அரச புறக்கணிப்பு மற்றும் அரசியல் அடக்குமுறைக்கு நீண்ட வரலாறு உள்ளது. அந்த அடக்குமுறையும் புறக்கணிப்பும் பரவிய சந்தர்ப்பங்களில் ‘83 ஜூலையும் ஒன்று. ஜூலை 24 அன்று, திருநெல்வேலியில் ராணுவம் கடைகளை அழித்ததில் 51 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


சிங்களக் கும்பல்களால் 5 நாட்களாக தமிழர்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை எரித்தும், சொத்துக்களை சூறையாடியும், தமிழர்களைக் கொன்றும் வன்முறைகள் தொடர்ந்தன. வெலிக்கடை சிறைச்சாலை உள்ளிட்ட சிறைகளில் ஏராளமான தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி ஜெயவர்தன ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தார். ஆனால் காவல்துறை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் வன்முறை மேலும் தொடர்ந்தது. 


ஜூலை 28 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, தமது உரிமைகளுக்காக போராடத் தொடங்கிய தமிழ் மக்களே இதற்குப் பொறுப்பு என்றும், அதற்கு சிங்கள மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர் என்றும் வன்முறையை நியாயப்படுத்தினார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் புதிய சமசமாஜக் கட்சி ஆகியவை வன்முறையைத் தூண்டிய  குற்றச்சாட்டின் கீழ் தடை செய்யப்பட்டன.


பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் 1983 வன்முறைகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ அல்லது கொலையாளிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவோ இல்லை.


1983 கறுப்பு ஜூலை படுகொலைக்குப் பிறகு இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்முறைகள் முடிவுக்கு வரவில்லை. அதன்பிறகு, 27 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரில் இலங்கை பாதிக்கப்பட்டது.


1983 கறுப்பு ஜூலை படுகொலைக்கு இன்றுடன் 39 ஆண்டுகள். இலங்கையின் வரலாறு சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பாரபட்சமான ஒன்றாகும். நிகழ்காலத்தை விட அந்த வரலாற்றை உன்னிப்பாகப் பார்க்க நம்மைத் தூண்டும் காலம் வேறெதுவும் இருக்காது.


Act Now 

24/07/2021


உசாத்துணை

“Sri Lanka : Arrogance of Power" - Prof. Rajan Hoole


http://news.bbc.co.uk/2/hi/south_asia/3090111.stm 

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7521197.stm 

Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

මුල්ලිවායික්කාල් දෙමළ වර්ග සංහාර ස්මරණ දිනය

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?