இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?



லங்கையை பொருத்தமட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அவர்களின் பின்னணி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் என்பன அறிவு மற்றும் ஆராய்ச்சி துறையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 1980 ளில் பின்னர் 1000 கணக்கான மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடு சபையின் ஆய்வின் படி உலகின் மிகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கையை கொண்ட நாடுகளில் இலங்கை 2ம் இடத்தில் காணப்படுகின்றது. 1980 முதல் 80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நீலுகின்றது.


சென்சிலுவை சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது அந்நிறுவனத்திற்கு 20000 முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளன. மேலும் மனித உரிமை ஆணைக்குழு ஆம்னஸ்டி இன்டர் நெசனல் மற்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பாக விபரங்களை முன்வைக்கின்றன.


மைத்திரிபால சிறிசேன அவர் தலைமையிலான அரசாங்கம் 65000 ஆயிரத்துக்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திற்கு அவர்களது மறைவுப்பற்றிய சான்றிதழ் வழங்கும் திட்டம் ஒன்றை முன்வைத்தனர். இதன் ஊடாக அவ் குடும்பங்களுக்கு தமது சொத்துக்கள் தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதுடன் ஏனைய செலவுகளையும் தமது பிள்ளைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உதவிகளையும் பெற்று கொள்ளலாம் என கருதப்பட்டது.


வலிந்து காணாமல் போக செய்தமைக்கு ஏற்புடைய பொருப்பு உள்நாட்டு சட்ட தொகுதியில் 2018 ஆம் ஆண்டு 5 இலக்க சட்டத்தின் மூலம் அனைத்து ஆட்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச சமலாய சட்டம் உருவாக்கப்பட்டது.

8 தசாப்தமாக பாதிக்கப்பட்டோர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போக செய்யப்படுதலை குற்றலியல் குற்றபாதம் என ஸ்தாபிக்குமாறு கூறினார்.


காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டத்தை வலுப்பெற செய்தல்



  • வலிந்து காணாமல் ஆக்கபடுதல்களின் தொடர்ச்சி அடையாளம் காண்பதும் குற்றவியல் குற்ற சட்டம் அமுல்ஆவதற்கு முன்னர் இடம் பெற்ற சம்பவங்களை உள்ளடக்கங்களை சேர்த்தல்.

  • சட்டத்தின் 3வது வாசகத்தை திருத்தி அனைத்துவகை குற்றிலியல் குற்றவாளிகளையும் உள்ளடக்கக்கூடிய வகையிலும் சட்டத்தை திருத்துதல்.

  • வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை மனித்துவத்திற்கு எதிரான குற்றமாக அடையாளம் காணுதல்.

  • ஆசிரியர் பிரதீப் எக்னலிக்கொட மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டிபன் சுந்தர் ராஜ‘, அரசியல் செயற்பாட்டாளர் லலித்குமார் வீர ராஜா மற்றும் குகன் முரு நந்தன் குறிப்பிடலாம்.


காணாமல் போனோர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சனையை தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் முயற்சிக்கும் போது காணாமல் போன ஆக்கள் பற்றிய அலுவலகம் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக குறிக்கின்றது. 2016 இன் 14 இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றல் சுயாதீன ஆணைக்குழு என்ற வகையில் நிறுவப்பட்டுள்ளது.


காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் குறிக்கோல் கண்டறி காணாமல் போனோரை தேடுதல் மற்றும் அவர்களை கண்டறிய இத்தகைய சம்பவம் மீள நிகழ்வதை தடுப்பதற்கு பறிந்துரை முன்வைத்தல் இ காணாமல் போனோரினதும் அவர்களின் உறவினர்களின் உரிமையை பாதுகாக்ககூடிய வகையில் உக்கரவாதங்களை மேற்கொண்டு நிவாரனங்களை வழங்குவதற்கு உசிதமான நடவடிக்கைகளை அறிமுகம் செய்தல் என்பனவாகும்.


2018 மாசி மாதத்தில் 7 ஆணையாளர்களின் நியமனதோடு அலுவலகத்தின் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர். குறிப்பிட்ட அலகுகளையும் பிரதேச அலுவலங்களையும் அமைத்தல் ஸ்தாபித்தல் அலுவலக பணியாளர்டகளை ஆட்சேர்த்தல் மற்றும் கொள்கைகள் ஒழுங்குவிதிகள் செயன்முறைகள் என்பனவற்றை உருவாக்குதல் என்பன காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நடவடிக்கை உள்ளடக்கப்படும்.




காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவகத்தின் தற்போதைய நடவடிக்கை


  • 2018.02.28 திகதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தவிசாளருக்கும் ஏனைய உறுப்பினருக்களுக்குமான நியமன கடிதம் ஒப்படைக்கப்பட்டன.

  • காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நெறிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் இலங்கையின் தேசிய சட்டம் மற்றும் ஏற்புடைய ஏனைய சர்வதேச சட்ட கடமைப்பாடுகள் வழிகாட்டியாக அமையும்.

  • காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் நிரந்தரமான அலுவலகம் நிறுவப்படுவதோடு காணாமல் ஆக்கப்பட்டோர் என்போர் யுத்தம், அரவியல், அமைதியின்மை, அல்லது சிவில் கிளர்ச்சிகள் , கழகங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்குதல் உட்பட்ட சூழ்நிலைகள் எவராவது ஓர் ஆளுக்கு ஏற்பட்ட நிலை அல்லது அவரின் இருக்கும் இடம் நியாயமான முறையில் அறியவில்லை என நம்புகின்ற நபர் என்ற வகையில் ஓர் நபர் வரைவிலக்கணம் செய்கின்றார்.


சட்டம்


2017.12.17 திகதி இலங்கை அனைத்து ஆட்களையும் வலிந்து காணாமல் போதல் செய்தலுக்கு எதிரான சர்வதேச சமலாயத்தில் கைசாத்திட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஆலனி 30 திகதி நினைவு கூறப்படுகின்றது.


1980 முதல் JVP உருவாக்கப்பட்ட அமைதியின்மை மற்றும் உள்நாட்டு யுத்தம் ஆகியவை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற பல சமூக பிரச்சனைகளை தோற்றுவித்தன. இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது பாதுகாப்பு படையால் தடுத்து வைக்கப்பட்ட 12000 மேற்பட்ட நபர்கள் காணாமல் போனமையும் ஐக்கிய நாடுகள் சபையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கையான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது பற்றிய விடயங்கள் சர்வதேச பிரகடனத்தில் 2016.05.25 உள்வாங்கப்பட்டுள்ளது 2014 பின்னரான புதிய பிரச்சனைகளை புதிய அரசு கவனம் செலுத்துகின்றது. கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு LLRC பரணகம ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் OMP அலுவலகம் போன்றவற்றின் மீதான மக்களின் நம்பிக்கை மிக குறைவாக போயுள்ளது. மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வழங்கப்பட்ட போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.


அம்னஸ்டி அமைப்பினால் 2018 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதுகாப்பு படையினரால் தடுப்பு காவலில் வைத்தி பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விபரத்தை வெளியிடுமாறு அரசாங்கத்திட்டம் கோரப்பட்டுள்ளது. ஆனாலும் அது வெளியிடப்படவில்லை.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சிலர் யுத்தம் என்ற நோயினால் பல்வேறு நபர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதோடு அதன் பின்னர் பல்வேறு அரசியல் தலைமைகள் ஊடகவியளாளர்கள் மற்றும் இன்னும் சில பொதுமக்கள் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.




எஸ் .சுமையாமதி

ஜி.சுதர்ஷன்

2023/04/03

Comments

Popular posts from this blog

මුල්ලිවායික්කාල් දෙමළ වර්ග සංහාර ස්මරණ දිනය

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?