சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்



ன்று (மே 3) சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம். ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான அரசாங்கங்களின் பொறுப்பை நினைவுகூருவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஊடக வல்லுநர்கள் தொழில் மற்றும் ஊடக நெறிமுறைகளில் உள்ள சிக்கல்களை மறுஆய்வு செய்வதற்கான ஒரு நாள் இது. பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் நாள் இதுவாகும்.


இந்த நாளின் கருப்பொருள் "பொது மக்களின் நலனுக்கான தகவல்" தொடர்பானதாகும்.. இது நமது சுகாதாரத்தில் , மனித உரிமைகளில், ஜனநாயகத்தில் மற்றும் நிலையான வளர்ச்சியினில் நேரடியாக பாதிக்கும் ஊடகங்களில் ஈடுபடுவதில் கவனம் செலுத்துகிறது.


உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஊடக சுதந்திரத்திற்கான பத்திரிகை எல்லைகள் இல்லாத பத்திரிகையாளர்களின் அமைப்பினால் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான  குறியீட்டில் 178 நாடுகளில் 127வது இடத்தில் இலங்கை உள்ளது. ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் கருத்துக்கமைய என்று 1999-2009 காலப்பகுதியில் இலங்கையினுள் பத்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதோடு 14 பேர் பத்திரிகையாளர்கள் இன்றுவரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர் மற்றும் மேலும் பலர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஊடகத்துறையில் ஈடுபட்டு  ஊனமுற்ற ஊடகவியலாளர்களும் உள்ளனர். மேலும் தங்கள் உயிரைக் காப்பாற்ற மற்ற நாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட பத்திரிகையாளர்களும் காணப்படுகின்றனர். இருப்பினும், இந்த எந்தவொரு குற்றத்திற்கும் நீதி வழங்கப்படவில்லை. 


லசந்த விக்ரமதுங்கே படுகொலை, பிரஜீத் ஏக்னலிகோடா காணாமல் போனமை, பொத்தல ஜெயந்தாவிற்கு ஏற்பட்ட மனிதாபிமானமற்ற சித்திரவதை போன்ற சில சம்பவங்களைத் தவிர, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான நிறைய குற்றங்கலானது சமூகத்தின் எழுச்சியடுவதர்கான நடவடிக்கைகளைக் கூட செய்ததாக தெரியவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம், அந்தக் குற்றங்களுக்கு நீதி கிடைக்காமல் போனதேயாகும். ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களைப் போலவே, பொது மற்றும் தனியார் வணிகங்களின் ஊடக உரிமையும் உண்மையான ஊடக சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.


உள்நாட்டுப் போரின்போது  இலங்கையானது உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக காணக் கிடைத்தது. பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களானது போரின்போதும் போரிற்கு பிற்பட்ட காலப்பகுதியிலும்  நடைப்பெற்றது. போரின் போது நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் போருக்குப் பின்னரும் நடைமுறையில் உள்ளதோடு , குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, சமீபத்திய காலங்களில் கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.


பேஸ்புக்கில் தீவிரவாத கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ்  ரம்ஸி ரசிக் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஒரு சிறுகதையின் மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக வெறுப்பான கருத்தைப் பரப்பியதற்காக எழுத்தாளர் சக்திக சத்குமார கைது செய்யப்பட்டார். இளம் முஸ்லீம் கவிஞரான அனாஃப் ஜசீம், தமிழில் வெளியிடப்பட்ட நவரசம் என்ற கவிதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாதக் கருத்துக்களைக் பரப்புவதாக  குற்றம் சாட்டப்பட்டதையடுத்து சிங்கள மொழி பேசும் அதிகாரிகளால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மிக சமீபத்தில் உயர் ரக வாகன பயணத்திற்காக சாலை மூடப்பட்டமைக்கு  எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பொலிஸ் கடமையை நடக்கவிடாது அதற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.


இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 14 (1) கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 19வது பிரிவு மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 19வது பிரிவு கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது.


எவ்வாறாயினும், இலங்கையில்  சட்டங்களானதுகருத்து  வெளிப்பாட்டை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றனவே ஒழிய அதை பாதுகாக்க அல்ல. ஊடக சுதந்திரத்தை ஜனநாயக சமூக நடைமுறையிலிருந்து விலக்க முடியாது. சுதந்திர ஊடகங்களானது ஒரு சுதந்திர சமுதாயத்தை பிரதிபலிக்கும். கருத்து சுதந்திரத்தை தடுப்பதானது சுதந்திர வாழ்க்கைக்கான  உரிமையைத்  தடுப்பதாகும்.


கொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போன, சித்திரவதை செய்யப்பட்ட, சிறையில் அடைக்கப்பட்ட மற்றும் நாடுகடத்தப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் உண்மையை வெளிப்படுத்தியதற்காகவும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காகவும் எங்கள் அன்பும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.


sources 

https://rsf.org/en/sri-lanka?nl=ok

https://rsf.org/en/2021-world-press-freedom-index-journalism-vaccine-against-disinformation-blocked-more-130-countries 


For further reading - 

"මාධ්‍යවේදීන්ට එරෙහි අපරාධ සඳහා දණ්ඩ මුක්තිය හිමිවීම අවසන් කිරීම සඳහා වූ ජාත්‍යන්තර දිනය "    

https://actnowyouth.blogspot.com/2021/02/international-day-to-end-impunity-for.html 


Comments

Popular posts from this blog

ජාත්‍යන්තර මව් භාෂා දිනය

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?