வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்
இன்று வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாகும். 2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது சபையால் உலகம் முழுவதும் இடம்பெறும் வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் சாட்சிகாரர்களுக்கு, காணாமல் போனவர்களின் உறவுகளிற்கு ஏற்படுகின்ற சித்திரவதைகள், கொடூரமான தண்டனைகள், பயமுறுத்துதல் தொடர்பாக கவனம் செலுத்தி ஆகஸ்ட் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்படுதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பாகும். இரண்டாம் உறுப்புரையின்படி அரசின் மூலமாக கைது செய்யப்படுதல், தடுத்து வைத்திருத்தல், கடத்தல் அல்லது வேறு வகையிலான சுதந்திரத்தை பறித்து அவ்வாறு சுதந்திரத்தை பறித்து அல்லது காணாமல் போனவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஏற்றுக்கொள்வதை மறுத்தல் என்பன வலிந்து காணாமல் ஆக்கப்படுவதாக கொள்ளப்படுகின்றது. சர்வதேச சட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக அமைவதோடு அந்த சம்பவங்கள் தொடர்பில் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு...