சமாதானம் உருவாக வேண்டும் மதிப்பளிப்பதன் மூலம்.
இ ஸ்லாமியர்களின் புதவுடலை அடக்கம்செய்வது தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினை இனவாத கொள்கையாளர்களால் உருவாக்கப்பட்டதே , தவிர சுகாதார பிரிவினரால் அல்ல. ஒரு பக்கத்தில் இது அவர்களின் மனித உரிமை. இரண்டாவதாக மத உரிமை. மூன்றாவது , நல்லிணக்கத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கும் இந்த யுகத்தில் அந்த நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டுமானால் , செய்ய வேண்டியது ஒன்றே . அது இந்நாட்டில் வாழும் அனைத்து மதத்தினரினதும் உரிமையை பாதுகாத்தலே. அடக்கம் செய்வதால் , கோவிட்-19 பரவுவதாக உறுதிபடுத்தப்படவில்லை. அண்மையில் வெளிவந்த “ தொழிநுட்ப அமைப்பு அறிக்கையில் ” அவர்கள் அடக்கம் செய்வதற்க்கும் எரிப்பதற்க்கும் அனுமதித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏன் ஆளுகை செய்பவர்கள் இதை குறித்து பேச மறுக்கின்றார்கள்? இதற்க்கு முன் எமது இஸ்லாம் சகோதரர்களுக்கு எதிராக தர்கா நகரிலும் , அம்பாரையிலும் திகனையிலும் , நாசம் செய்தனர் . சொத்தை கொள்ளையடித்தனர் , தீ மூட்டினர் , இந்த நேரத்தில் இஸ்லாம் மக்களை வேதனைபடுத்தி வன்முறையை அழ...